WEBVTT

00:01.668 --> 00:05.339
நான்தான். ரிவர்.
துப்பாக்கியைக் கீழே போடுகிறீர்களா?

00:59.726 --> 01:00.727
நான்தான்.

01:05.566 --> 01:06.567
சரி.

01:15.701 --> 01:16.702
நான்தான், ரிவர்.

01:23.625 --> 01:25.002
எங்கே இருக்கிறீர்கள்?

01:39.933 --> 01:40.767
என்ன...

01:44.229 --> 01:45.772
நீங்கள் ஆடை அணிந்துள்ளீர்களா
என்று சொல்லுங்கள்.

01:59.369 --> 02:01.371
ஓ... அடச்சே. ஓ.

02:03.707 --> 02:05.042
தாத்தா.

02:06.502 --> 02:07.920
கடவுளே, நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

02:08.794 --> 02:10.464
துப்பாக்கியைக் கீழே போடுங்கள், சரியா?

02:12.591 --> 02:14.510
இது நான்தான். ரிவர்.

02:16.428 --> 02:18.847
- ப்ளீஸ். நான் ரிவர். நான்தான்.
- நீ எப்படி இங்கே உள்ளாய்?

02:20.599 --> 02:22.351
- உன்னை சுட்டேனே.
- இல்லை.

02:23.477 --> 02:25.229
- துப்பாக்கியை என்னிடம் கொடுங்கள்.
- அதாவது...

02:25.729 --> 02:28.565
என்ன, அவன் உன்னைப் போல நடித்தவனா?

02:28.565 --> 02:31.276
எனக்கு தெரியவில்லை, சரியா?
என்னிடம் துப்பாக்கியைக் கொடுங்கள்.

02:31.276 --> 02:33.987
நீயும் நடிப்பவன் இல்லை என நான் எப்படி நம்புவது?

02:35.989 --> 02:37.407
எனக்கு மட்டுமே தெரிந்த
எதையாவது கேளுங்கள்.

02:43.497 --> 02:46.834
நான் என் கேஜிபி கௌன்டர்பார்ட்டை பெர்லினில்
சந்தித்தது, கிறிஸ்துமஸ் தினம், 19...

02:46.834 --> 02:50.504
- எண்பத்து இரண்டு.
- 82, சரிதான்.

02:50.504 --> 02:53.257
நாங்கள் அதிகமாகக் குடித்தோம்.

02:54.550 --> 02:56.969
- அவனுடன் நான் என்ன செய்தேன்?
- நீங்கள் பனிப்பந்து சண்டை போட்டீர்கள்.

03:04.601 --> 03:05.978
அடக் கடவுளே.

03:08.522 --> 03:10.315
சரி. சரி.

03:11.108 --> 03:13.527
சரி. ஒன்றுமில்லை.

03:13.527 --> 03:17.072
ஒன்றுமில்லை. நான் வந்துவிட்டேன்.

03:18.365 --> 03:23.120
சரி. ஒன்றுமில்லை.
ஒன்றுமில்லை. உட்காருங்கள்.

03:23.871 --> 03:28.292
அடக் கடவுளே. அடக் கடவுளே.

03:33.338 --> 03:35.924
சரி. ஹேய். ஒன்றுமில்லை.

03:35.924 --> 03:38.260
உங்களுக்கு ஒன்றுமில்லை.

03:38.886 --> 03:44.349
அவனைச் சுட்டதும்
உன்னைச் சுட்டுவிட்டேனோ என நினைத்தேன்.

03:46.476 --> 03:47.686
நான் உன்னைக் கொன்றிருக்கக்கூடும்.

03:52.232 --> 03:55.736
இல்லை. பாருங்கள், நான் இதைச் சரிசெய்கிறேன்.

03:55.736 --> 03:57.237
என்னால் இதைச் சரிசெய்ய முடியும், சரியா?

03:57.237 --> 03:59.323
இது முன்னர் நாம் சமாளிக்காத விஷயமில்லைதானே?

03:59.323 --> 04:00.532
- இல்லை.
- புரிகிறதா?

04:01.909 --> 04:03.619
அதாவது, இது மோசம்தான், ஆனால்...

04:06.413 --> 04:08.165
கடவுளே. அவன் என்னைப் போலத்தான் இருக்கிறான்.

04:12.711 --> 04:13.712
சரி.

04:13.712 --> 04:18.175
என்ன நடந்தது என்று தொடக்கத்தில் இருந்து
சொல்கிறீர்களா?

04:20.093 --> 04:21.470
சரி. அது...

04:24.681 --> 04:26.016
அவன் கதவைத் தட்டினான்,

04:27.518 --> 04:31.313
அவன் நேராக உள்ளே வந்து, குளிக்க
ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

04:31.313 --> 04:34.733
- சரி. அவன் என்னைப் போல நடித்தானா?
- ஆம்.

04:36.360 --> 04:39.029
- அது நான் என்று நினைத்தீர்களா?
- முதலில் அப்படித்தான் நினைத்தேன்.

04:39.947 --> 04:42.824
பிறகு நீ ஒருபோதும் கூறாத
ஒன்றைக் கூறினான்.

04:44.034 --> 04:45.285
அவன் என்னை, “கிராம்ப்ஸ்” என்று அழைத்தான்.

04:46.036 --> 04:50.290
நான் அவனை எதிர்கொண்டேன், அவன் என்னைத் தாக்க
வந்தான். அப்போதுதான் அவனைச் சுட்டேன்.

04:50.290 --> 04:51.375
சரி. சரி.

04:52.459 --> 04:53.669
அவனிடம் ஆயுதம் இருந்ததா?

04:54.753 --> 04:57.130
- இல்லை, எதுவும் ஆயுதம் போல இல்லை.
- அடக் கடவுளே.

04:58.048 --> 04:59.800
ஆயுதமில்லாத ஒருவனைச்
சுட்டிருக்கிறேன்.

04:59.800 --> 05:02.469
இல்லை. யாரும் என்னைப் போல இருக்கும் ஒருவனை,
நல்ல மனதுடன் உங்களைக்

05:02.469 --> 05:04.805
குளிப்பாட்டுவதற்காக அனுப்ப மாட்டார்கள், சரியா?

05:04.805 --> 05:08.767
- கடவுளே.
- பாருங்கள். டயாசிபாம்.

05:10.269 --> 05:12.521
அவன் உங்களுக்கு இதைக் கொடுத்து,
மூழ்கடிக்கத்தான் வந்துள்ளான்.

05:12.521 --> 05:13.564
கடவுளே.

05:15.607 --> 05:17.985
இது ஃபிரான்ஸுக்குத் திரும்பிச்
செல்வதற்கான டிக்கெட்.

05:20.404 --> 05:21.905
”லெ பிளான்க் ரூஸ்.”

05:23.240 --> 05:26.827
அது லவாண்டில் இருக்கும் கஃபே.

05:27.494 --> 05:30.038
லவாண்ட், உங்களுக்கு எதுவும்
நினைவுக்கு வருகிறதா?

05:30.539 --> 05:33.792
- எதுவும் வரவில்லை.
- பரவாயில்லை.

05:41.008 --> 05:42.009
”ஆடம் லாக்ஹெட்”?

05:44.678 --> 05:46.889
நீ என்னிடம் அதிகமாக கேள்வி கேட்கிறாய்.
நான் குழப்பமடைகிறேன்.

05:46.889 --> 05:49.516
இல்லை, நீங்கள் கற்பித்தது போல,
உங்களை விசாரிக்கிறேன், சரியா?

05:49.516 --> 05:51.852
அது ஒருவேளை முன்பு உங்களுக்குத் தெரிந்திருந்து,
இப்போது மறந்துவிட்ட பெயராக இருக்கலாம்.

05:51.852 --> 05:54.563
- பார்க் இதைச் சரிசெய்வார்கள்.
- வேண்டாம்.

05:54.563 --> 05:55.647
அடச்சே.

05:56.899 --> 05:58.650
- நல்லது. இப்போது நமக்கு நேரம் குறைவாக உள்ளது.
- எதற்கு?

05:59.776 --> 06:03.030
அவர்கள் இங்கே வந்தால், உங்களை இழந்துவிடுவேன்.
அது புரிகிறதா?

06:03.030 --> 06:05.449
அவர்களிடம் என்ன கூற வேண்டும் என்பதில்
நிச்சயமாக இருக்க வேண்டும்.

06:05.449 --> 06:07.784
- நான் நிச்சயமாக உள்ளேன்.
- ஏனெனில் அதைக் கூறினால்,

06:07.784 --> 06:08.911
அவ்வளவுதான், சரியா?

06:08.911 --> 06:10.370
அதை மாற்ற முடியாது. அது பதிவாகிவிடும்.

06:10.370 --> 06:12.581
நான் ஏன் தவறான அறிக்கையைக்
கூற வேண்டும்?

06:12.581 --> 06:15.542
- ஏனெனில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லைதானே?
- என்னிடம் அப்படிப் பேசாதே!

06:15.542 --> 06:16.919
நான் உன் அப்பா!

06:22.382 --> 06:23.383
அடக் கடவுளே.

06:24.676 --> 06:28.305
- தாத்தா.
- ஆம். அது...

06:29.806 --> 06:33.727
ஆம். எது சிறந்ததென நினைக்கிறாயோ
அதையே செய்.

06:33.727 --> 06:39.066
அதாவது, இது உன்னுடைய
ஆபரேஷன்தானே.

06:44.029 --> 06:46.198
- ஆனால்... என்னை மன்னித்துவிடுங்கள்.
- இல்லை.

06:46.198 --> 06:49.076
- இல்லை, உங்களிடம் நான் கத்தியிருக்கக் கூடாது.
- இல்லை. பரவாயில்லை.

06:50.452 --> 06:52.704
சரி, நாம் இங்கிருந்து
புறப்பட வேண்டும்.

06:53.288 --> 06:54.373
எங்கே செல்வது?

06:54.373 --> 06:56.500
தெரியவில்லை. எங்காவது
பாதுகாப்பான இடத்திற்கு.

06:56.500 --> 06:58.168
நாம் கீழே சந்திக்கலாமா?

07:00.587 --> 07:03.423
- நீ என்ன செய்யப் போகிறாய்?
- நான் நமக்கு நேரம் கிடைக்கச் செய்கிறேன். சரியா?

07:04.550 --> 07:05.551
நல்லது.

09:10.384 --> 09:12.469
மிக் ஹெர்ரான் எழுதிய ஸ்பூக் ஸ்ட்ரீட்
புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது

09:38.412 --> 09:39.538
மேடம்.

09:39.538 --> 09:41.707
அது முக்கியமெனில், நடந்துகொண்டே
என்னிடம் பேசு.

09:41.707 --> 09:43.208
நான் கோப்ரா மீட்டிங்கிற்குச் செல்கிறேன்.

09:43.208 --> 09:46.253
ஃபிளாட்டிலிருந்து வெடிக்க வைத்தவனின்
பாஸ்போர்ட்டை என்னிடம் கொடுத்தனர்.

09:46.253 --> 09:49.006
- என் பெயர் கீடி ரஹ்மான்.
- தெரியும்.

09:50.632 --> 09:52.843
இந்த பாஸ்போர்ட் எண்ணுக்கு ஒரு
முடிவு கிடைத்துள்ளது.

09:52.843 --> 09:55.554
அதுவும் தெரியும். அவன் போன வாரம்
ஃபிரான்ஸிலிருந்து வந்துள்ளான்.

09:56.096 --> 09:58.348
இல்லை. இது உண்மையான
பாஸ்போர்ட் எண்.

09:58.348 --> 10:00.642
- இதில் ஒரு முரண்பாடு உள்ளது.
- அது போலியானதா?

10:00.642 --> 10:02.853
- இல்லை, மேடம்.
- பிறகு என்ன?

10:02.853 --> 10:05.480
- எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
- ஆம், கீழே வருகிறேன்.

10:06.648 --> 10:07.649
விரைவாகக் கூறு.

10:09.109 --> 10:12.196
அதை பாஸ்போர்ட் அலுவலகம்,
இத்தனை ஆண்டுகள் சட்டப்படி புதுப்பித்துள்ளது.

10:12.196 --> 10:15.282
எந்தவொரு தளத்தில் ராபர்ட் வின்டர்ஸைத்
தேடினாலும், எல்லாம் சரியாக இருக்கிறது.

10:15.282 --> 10:17.451
பிறப்புச் சான்றிதழ், தேசியப் பாதுகாப்பு எண்,

10:17.451 --> 10:20.621
வங்கிக் கணக்கு, கிரெடிட் ரேட்டிங்.
எதுவுமே சந்தேகப்படும்படி இல்லை.

10:20.621 --> 10:21.663
ஆனால்?

10:21.663 --> 10:26.001
ஆனால் நம் பதிவுகளின்படி, அந்தப் பாஸ்போர்ட்டை
நாம்தான் முதலில் கொடுத்துள்ளோம்.

10:29.046 --> 10:30.255
அதற்குச் சாத்தியமில்லை.

10:30.255 --> 10:32.049
இல்லை, இந்தக் கட்டடத்தில் இருந்து
கொடுத்துள்ளோம்.

10:32.049 --> 10:34.885
பழைய கட்டடத்தில், 28 ஆண்டுகளுக்கு முன்பு.

10:38.388 --> 10:40.390
இதை என்னிடம்தான் முதலில் சொல்கிறாய்
என நினைக்கிறேன்.

10:40.891 --> 10:42.518
- ஆம்.
- நல்லது.

10:45.604 --> 10:49.399
இதைக் கண்டறியும் வரை, நீ என்னிடம்
மட்டும்தான் அறிக்கையிட வேண்டும்.

10:50.400 --> 10:52.402
நீ பாதுகாப்பான இடத்திற்குச் சென்று,

10:52.402 --> 10:55.072
ராபர்ட் வின்டர்ஸின் வாழ்க்கை தொடர்பாக
நம்மிடம் இருக்கும்

10:55.072 --> 10:57.199
அனைத்தையும் சேகரி.

10:57.199 --> 10:58.784
அவன் யார் என்று நாம் கண்டறிய வேண்டும்.

10:58.784 --> 11:00.619
அவன் நமது ஆட்களில் ஒன்றாக இருந்தால்?

11:01.328 --> 11:03.747
அதைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை.
நீ என் அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

11:03.747 --> 11:06.416
அங்கிருந்து வேலையைத் தொடங்கு.
உன்னைக் கூட்டிச் செல்ல யாரையாவது அனுப்புகிறேன்.

11:32.276 --> 11:35.821
ஃபிளைட், நீ ஒருவரை அகற்றி,
தனிமைப்படுத்த வேண்டும்.

11:36.697 --> 11:37.698
உடனடியாக.

11:39.074 --> 11:43.161
வெஸ்டேக்கர்ஸ் ஷாப்பிங் சென்டருக்கு
வெளியே உள்ள தெருவில் இருக்கிறேன்,

11:43.161 --> 11:46.373
இங்கே இன்னும் மனநிலை சோகத்துடனும்
துயரத்துடனும் உள்ளது.

11:46.874 --> 11:49.585
என்னுடன் இப்போது ரெவரெண்ட் ஹாரிஸ்
இணைகிறார்...

11:49.585 --> 11:54.298
தப்பிப்பதற்கான பணத்தை தோட்டத்தில் இருந்து
எடுக்கும்படி ரிவரிடம் டேவிட் கூறியுள்ளார்.

11:56.049 --> 11:57.092
இது காலாவதியாகிவிட்டது.

11:58.594 --> 12:01.680
இது மோசமான படம் இல்லை.
என்னுடைய படத்தில் நான் குண்டாகத் தெரிவேன்.

12:02.264 --> 12:03.348
அதைக் கற்பனை செய்து பாருங்கள்.

12:04.308 --> 12:05.642
என்ன நடக்கிறது?

12:05.642 --> 12:07.561
தலைமை ஏஜென்டிடம் ஏன் பொய் சொன்னீர்கள்?

12:08.604 --> 12:10.147
ரிவர் இறந்தது போல நடித்து, என்ன நடக்கிறது

12:10.147 --> 12:12.983
என்பதைக் கண்டுபிடிக்க, அவனது
முகத்தைச் சுட்டுள்ளான்.

12:13.901 --> 12:17.070
- முட்டாள்தனமான செயல்தான். ஆனால்...
- ஆனால் ஏஜென்டின் அடையாளத்தை வெளியிடக் கூடாது.

12:19.239 --> 12:20.741
அவன் டாலர்களை எடுத்துச் சென்றுவிட்டான்.

12:20.741 --> 12:24.328
கடந்தகாலம் நினைவு வருகிறது, ஹேய்?
டிராக்மா, லிரா.

12:24.328 --> 12:26.663
என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் என்
ஃபோனையும் அவனிடம் கொடுத்தேன்.

12:26.663 --> 12:29.374
அவன் சிம்மைக் கழட்டிவிட்டான், அவசரத்தில்
அதைப் பயன்படுத்துவதற்காக இருக்கலாம்.

12:33.212 --> 12:34.213
அவன் எங்கே சென்றுள்ளான்?

12:35.380 --> 12:37.216
நான் கேட்கவுமில்லை, அவன் கூறவுமில்லை.

12:37.841 --> 12:39.426
அதற்காக உனக்குத் தெரியாது என்று
அர்த்தமில்லை.

12:44.598 --> 12:47.226
சரி. அவன் கழிவறையில் இருந்தபோது
அவன் பாக்கெட்டுகளில் தேடினேன்.

12:47.226 --> 12:51.021
ஃபிரான்ஸிற்குத் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்,
லெ பிளான்க் ரூஸுக்கான கஃபே ரசீது இருந்தன,

12:51.021 --> 12:52.940
அது வெள்ளை ரஷ்யன்...
எதுவும் கூறாதீர்கள்...

12:52.940 --> 12:54.942
அது லவாண்ட் என்ற நகரத்தில் உள்ளது,
மேலும் பாஸ்போர்ட் இருந்தது.

12:54.942 --> 12:56.818
- யாருடைய பெயரில்?
- ஆடம் லாக்ஹெட்.

12:59.696 --> 13:02.324
மீண்டும் ஹீரோ
வேலை செய்யப் புறப்பட்டுவிட்டான்.

13:02.824 --> 13:05.244
அவன் என்னிடம் டேவிட்டை ஒப்படைத்துவிட்டுச்
சென்றுள்ளான், ஏனெனில் டேவிட் இருக்கும் நிலையில்

13:05.244 --> 13:07.538
அவரை எதுவும் கூற வைக்கலாம்.

13:07.538 --> 13:09.873
பார்க் தங்களுக்கேற்ற கதையில்
அவரைக் கையொப்பமிடச் செய்யும்.

13:11.041 --> 13:12.709
அதாவது, அவர் இங்கே வரும்போது
ஓரளவு சுயநினைவுடன்தான் இருந்தார்.

13:12.709 --> 13:14.878
ஆனால் அப்போதிலிருந்து, அவர்
குழப்பத்திலேதான் இருக்கிறார்.

13:15.420 --> 13:17.089
அவனுக்கு ரிவர் போனது தெரியுமா?

13:17.089 --> 13:20.676
இல்லை, சந்தேகம்தான். அவரை
வருத்தப்பட வைக்க அவன் விரும்பவில்லை.

13:20.676 --> 13:22.427
அது கிடக்கிறது.
இவன் கவலைப்பட வேண்டும்.

13:25.013 --> 13:28.350
லெ பிளான்க் ரூஸ், ஹ்ம்ம்?
நீ அங்கே சென்றுள்ளாயா?

13:28.350 --> 13:30.519
- நான் ரிவரைக் கொன்றுவிட்டேன்.
- இல்லை.

13:31.311 --> 13:33.063
நான் ரோஸிடம் என்ன சொல்லப் போகிறேன்?

13:34.690 --> 13:38.735
- ஒன்றுமில்லை. ஏனெனில் அவர் இறந்துவிட்டார்.
- அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்று கூறினேனே.

13:38.735 --> 13:41.154
ரிவர் இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி
உயிருடன் இருப்பதாகவும் நினைக்கிறார்.

13:41.822 --> 13:44.658
லவாண்ட் நகரத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?

13:46.034 --> 13:47.035
எனக்குத் தெரியவில்லை.

13:48.078 --> 13:50.789
ஜாக்சன்தானே?
உன்னைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

13:50.789 --> 13:53.083
ஆம், தெரியும். மகிழ்ச்சி.
ஆம். லவாண்ட்?

13:53.083 --> 13:56.170
- லவாண்ட்? ஃபிரெஞ்சில் லாவண்டர்.
- ஆம்.

13:57.588 --> 14:00.799
லாவண்டர் நீல நிறம், டில்லி, டில்லி.
லாவண்டர் பச்சை நிறம்.

14:02.342 --> 14:04.970
- லாவண்டர் நீல நிறம், டில்லி, டில்லி
- விளையாடாதே, கிழட்டு...

14:04.970 --> 14:07.264
- லாவண்டர் பச்சை நிறம்
- ஓ, ஜாக்சன். அவருக்கு உடல்நிலை சரியில்லை.

14:07.264 --> 14:08.891
- அவர் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்.
- நான் ராஜாவாகும்போது...

14:08.891 --> 14:11.685
அடச்சே. அவன் நடிக்கிறான். தன்
மறதிக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறான்.

14:11.685 --> 14:14.188
- அவனுக்கு நான் யாரென்று தெரிந்திருந்தது.
- இன்னும் பாட முடிகிறது.

14:14.188 --> 14:16.565
லவாண்ட். ரிவர் அங்கே சென்றிருக்கிறான்.

14:16.565 --> 14:18.775
இல்லை. ரிவர் இறந்துவிட்டான்.

14:18.775 --> 14:22.154
உனக்குத் தெரிந்ததைக் கூறவில்லை எனில்,
அவன் இறந்து போகலாம்.

14:22.154 --> 14:23.238
நான் எங்கே இருக்கிறேன்?

14:25.240 --> 14:27.701
- இது யாருடைய அறை?
- இல்லை. நீங்கள்...

14:27.701 --> 14:29.703
- டேவிட், நீங்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளீர்கள்.
- என்ன?

14:29.703 --> 14:31.955
- ஆம். ரிவர்தான் உங்களை இங்கே கூட்டி வந்தான்.
- ரிவரா?

14:31.955 --> 14:33.665
இங்கே உட்காருங்கள். கமான்.

14:34.833 --> 14:37.961
எனக்குப் புரியவில்லை. நான்...

14:41.048 --> 14:45.344
அங்கே ஓர் ஆள் இருந்தான்.
அவன் ரிவர் போல இருந்தான், அவனைச் சுட்டுவிட்டேன்.

14:45.969 --> 14:49.389
நீ உள்ளே இருக்கிறாய் எனத் தெரியும். உனக்கு
நான் யாரெனத் தெரியும் என்றும் தெரியும்.

14:49.389 --> 14:52.976
ரிவர் மிஷனில் தனியாக இருக்கிறான்.

14:52.976 --> 14:56.563
அவன் உன் பேரனாக இருக்கலாம், ஆனால்
அவன் என்னுடைய ஏஜென்ட்.

14:56.563 --> 15:00.108
அவன் யாருக்கு எதிராக, ஏன் சென்றுள்ளான்?
எதில் ஈடுபடுகிறான்?

15:00.108 --> 15:04.655
நான் அவனைப் பாதுகாக்க முயன்றேன். எப்போதும்
அவனைப் பாதுகாக்க முயன்றேன்.

15:05.822 --> 15:07.533
என்னை நீ நம்புகிறாய்தானே, ரோஸ்?

15:08.033 --> 15:10.661
இவன் உன்னை, இறந்து போன
80 வயது பெண்ணாக நினைக்கிறான்.

15:10.661 --> 15:13.413
- ஒருவேளை நான் இவனை அறைய வேண்டும் போல.
- மனிதாபிமானத்தோடு இருங்கள், ஜாக்சன்.

15:13.413 --> 15:15.582
அப்படித்தான் இருந்தேன். இவனுக்காக
வேலை செய்த வரை.

15:16.667 --> 15:17.751
இப்போது போகிறீர்களா?

15:17.751 --> 15:20.963
இவன் எப்போது, ஏன் ஃபிரான்ஸில் இருந்தான்
என்று கண்டறியப் போகிறேன்.

15:20.963 --> 15:22.047
அதேநேரத்தில்,

15:22.047 --> 15:24.550
பயனுள்ள எதுவும் அவன் நினைவுக்கு
வந்தால், என்னிடம் சொல்.

15:32.724 --> 15:34.393
உங்களுக்கு
லவாண்ட் தெரியுமா?

15:34.393 --> 15:35.561
தெரியாது.

15:35.561 --> 15:37.646
அங்கே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை.

15:38.397 --> 15:39.565
நீங்கள் சுற்றுலாப் பயணியா?

15:40.065 --> 15:43.986
நானா? இல்லை. ஒரு நண்பரைத் தேடுகிறேன்.

15:43.986 --> 15:45.946
நீங்கள் பிரிட்டிஷ்தானே?

15:45.946 --> 15:48.156
ஆம், மன்னிக்கவும்.

15:48.156 --> 15:51.493
இல்லை, பரவாயில்லை.
உங்களை இங்கே இறக்கிவிடவா?

15:52.286 --> 15:53.662
- ஆம்.
- சரியா?

15:53.662 --> 15:56.748
டாக்ஸி - பாரிசியன்

15:58.041 --> 15:59.209
ஆக...

15:59.793 --> 16:03.088
மொத்தம் 95 யூரோ.

16:04.840 --> 16:06.216
மீதியை வைத்துக்கொள்ளுங்கள்.

16:06.216 --> 16:09.595
நன்றி. உங்கள் நண்பரைக்
கண்டுபிடிப்பீர்கள் என நம்புகிறேன்.

16:09.595 --> 16:11.263
நன்றி. பிறகு சந்திப்போம்.

16:11.263 --> 16:12.639
இந்த நாள் இனிதாக இருக்கட்டும்.

16:26.820 --> 16:32.701
வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை, பாதுகாப்பு.
இவற்றில் ஒன்று இல்லாமல் இன்னொன்று இருக்காது.

16:34.953 --> 16:35.954
இரண்டு...

16:38.248 --> 16:40.626
இவற்றில் ஒன்று இல்லாமல் மற்ற
இரண்டும் இருக்காது. புரிகிறது.

16:40.626 --> 16:43.504
தவறுகள் நடக்கும் இடத்தில்,
நாம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

16:43.504 --> 16:45.380
அப்படியே இல்லை, ஆனால் உங்களுக்குப்
புரியும்.

16:46.256 --> 16:50.844
நம் செயல்பாடுகளில் பெரும்பாலானவை
ரகசியமாக நடப்பதைப் பாராட்டுகிறேன்.

16:51.345 --> 16:54.097
ஆனால் கொஞ்சம் வெளிப்படைத்தன்மை
இருப்பது நல்லது என நினைக்கிறேன்,

16:54.681 --> 16:57.142
ஏனெனில் அப்போதுதான் சிறப்பாகச்
செய்ய நாம் கற்றுக்கொள்ள முடியும்.

16:57.684 --> 17:00.729
அப்போதுதான் நம் சிறந்த நிலையில் இருப்போம்,
நம்மால் நமது...

17:04.942 --> 17:07.986
- நீங்கள் அதை எடுக்க வேண்டும்.
- என்னுடையது இல்லை.

17:07.986 --> 17:09.070
என்ன... அது...

17:10.864 --> 17:11.949
அடச்சே. என்னுடையதா?

17:12.532 --> 17:15.368
அது என்னு... மன்னி...
அது சங்கடமாக உள்ளது, இல்லையா?

17:15.368 --> 17:17.871
இது புதிய ஃபோன் என்பதால்,
எனக்கு...

17:18.622 --> 17:21.458
நான் டைமர் வைத்ததாக நினைத்தேன்,
ஆனால் அது கவுன்ட்டௌன்.

17:21.458 --> 17:22.542
சுலபமாக முடிந்தது.

17:22.542 --> 17:25.671
ஆம், ஆனால் சரியாக 15 நிமிடங்களில்.
சரியாக. எனவே அது...

17:25.671 --> 17:28.089
கருத்து...

17:28.089 --> 17:30.717
- இது சரியான நேரமில்லை என நினைக்கிறேன்.
- இல்லை, சரிதான்.

17:30.717 --> 17:33.178
- அதை என்னால் சுருக்க முடியும்.
- தவறான தருணத்தில் என்றேன்.

17:34.012 --> 17:36.723
நம் அச்சுறுத்தல் நிலைகள் மோசமாக உள்ளன.
நீங்கள் இவற்றில் கையெழுத்திட வேண்டும்.

17:36.723 --> 17:41.103
அவை அந்தக் குடும்பங்களுக்கான அனுதாபம்
மற்றும் ஆதரவுக்கான கடிதங்கள்.

17:41.645 --> 17:42.646
ஆம், கண்டிப்பாக.

17:45.315 --> 17:48.485
இன்னொரு வெடிகுண்டு அச்சுறுத்தல் இல்லை என
நினைப்பது சீக்கிரம் என்பீர்களா?

17:48.485 --> 17:49.987
ஆம்.

17:51.071 --> 17:52.072
சில விதங்களில்,

17:52.072 --> 17:56.326
கருத்து ரீதியான தாக்குதலைவிட,
சீரற்ற, நோக்கமற்ற தாக்குதல் மோசமானது.

17:56.326 --> 17:58.161
அதில் எந்தத் துப்பும் இருக்காது.

17:58.161 --> 18:00.414
கேளுங்கள், டயானா,
இந்த விஷயத்தில்

18:00.414 --> 18:04.418
நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதை தற்போதைய நிலையைச்
சமாளிப்பதைப் பாராட்டுகிறேன்.

18:04.418 --> 18:07.588
ஆனால் இந்தச் சூழ்நிலையின் மேலோட்டமான கருத்து,

18:08.130 --> 18:11.925
நீண்டகாலத் திட்டமானது, ம்...

18:13.427 --> 18:14.595
அது என்னுடைய பொறுப்பு.

18:14.595 --> 18:15.929
- ஆம்.
- அது என்னுடைய வேலை,

18:15.929 --> 18:17.681
- ஏனெனில் அங்கிருந்துதான் நான் வருகிறேன்.
- ஆம்.

18:17.681 --> 18:20.934
மேலும், இது நமக்குள் இருக்கட்டும்,
இந்த இடத்தின் கலாச்சாரம்

18:20.934 --> 18:23.937
பெரியளவில் மாற வேண்டும். சரியா?

18:23.937 --> 18:28.025
உண்மையில், வேடிக்கையானது, அந்த யோசனையால்தான்
இந்த வேலை எனக்குக் கிடைத்தது.

18:29.651 --> 18:30.569
இல்லை, புரிகிறது.

18:30.569 --> 18:33.530
ஆம், புரிகிறது என்கிறீர்கள்,
ஆனால் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

18:33.530 --> 18:34.990
கொள்கை ரீதியாக, ஆம்.
நான் வெறும்...

18:34.990 --> 18:38.410
தற்போதைய சூழலில் நமது பொறுப்பு,
இந்தப் புதிய அணுகுமுறையால்

18:39.870 --> 18:42.789
மாறலாம் என்பதை கவனத்துக்குக்
கொண்டு வருகிறேன்.

18:42.789 --> 18:48.670
ஆம். நீங்களும் மற்ற அனைவரும்
இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

19:00.432 --> 19:03.018
வணக்கம். மன்னிக்கவும்.

19:17.491 --> 19:19.493
மன்னிக்கவும்... மன்னிக்கவும்.

19:21.328 --> 19:24.873
நாயை... பயமுறுத்தியதற்கு... மன்னிக்கவும்.

19:24.873 --> 19:28.836
எனக்கு உதவ முடியுமா, கஃபே ‘லெ பிளான்க் ரூஸ்’
எங்கே உள்ளது?

19:29.378 --> 19:30.379
பிளான்க் ரூஸா?

19:30.963 --> 19:33.715
அது இன்னும் கொஞ்ச தூரத்தில் உள்ளது.
ஸ்குவேரில்.

19:35.092 --> 19:36.051
நன்றி.

19:37.511 --> 19:38.512
நன்றி.

20:01.034 --> 20:03.370
அவனுக்கு கொடுக்கவில்லையா?
அது இந்தச் சூழலை மாற்றலாம்.

20:03.370 --> 20:04.454
எனக்கு இது பிடித்துள்ளது.

20:06.832 --> 20:10.502
வெஸ்டேக்கர்ஸால் உன்னிடம் துப்பாக்கி உள்ளதா?
அடுத்து என்ன நடக்கும் என பயப்படுகிறாயா?

20:12.588 --> 20:14.214
ஆம்.

20:19.469 --> 20:22.306
- நீ மீண்டும் அதைச் செய்யவில்லைதானே?
- எதை?

20:23.056 --> 20:23.891
சூதாடுவது.

20:23.891 --> 20:26.810
துப்பாக்கி வைத்திருப்பது ஏன் நான்
சூதாடுவதற்கான அறிகுறியாக இருக்க வேண்டும்?

20:26.810 --> 20:27.895
எனக்குத் தெரியவில்லை. அது...

20:29.188 --> 20:31.356
நீ பணம் கொடுக்க வேண்டிய யாராவது
மூர்க்கமாக நடந்துகொள்ளலாம்.

20:31.356 --> 20:36.528
இல்லை, அப்படி இல்லை.
கொஞ்சம் பணப் பிரச்சினை.

20:37.654 --> 20:39.573
கடவுளே. நீ மீண்டும் சூதாடுகிறாய்.

20:39.573 --> 20:40.699
ஒரு தடவை. அது பரவாயில்லை.

20:40.699 --> 20:43.660
பழைய நிலைக்குத் திரும்புவது நல்ல விஷயம்.
அது முன்னேற்றத்தின் அறிகுறி.

20:43.660 --> 20:44.995
- இல்லை.
- ஆம்.

20:44.995 --> 20:47.122
எப்போதும் சூதாடுவதைவிட, ஒருமுறை
சூதாடுவது பரவாயில்லை.

20:47.122 --> 20:50.501
ஆம், தொடர் கொலைகாரனாக இருப்பதைவிட,
ஒருவரை கொலை செய்வது பரவாயில்லை என்பது போல.

20:50.501 --> 20:52.794
- நான் யாரையும் கொல்லவில்லை, எனவே...
- எனில் துப்பாக்கி எதற்கு?

20:52.794 --> 20:55.255
- இதை விற்கப் போகிறேன்.
- இதை வேறொருவர் ஒருவரைக் கொல்லப்

20:55.255 --> 20:56.715
பயன்படுத்தும் விதமாக இதை
விற்கப் போகிறாய்?

20:56.715 --> 20:59.801
அந்தப் பணத்தை நிச்சயமாக லாபம் தரும்
விஷயத்திற்குப் பயன்படுத்தி, என் கடன்களை

20:59.801 --> 21:01.929
அடைத்துவிட்டு, இது வேறு கையில் போவதற்குள்
திரும்ப வாங்கிவிடுவேன்.

21:01.929 --> 21:04.389
- எந்தப் பிரச்சினையும் இல்லை.
- நீ மாயையில் இருக்கிறாய்.

21:06.183 --> 21:07.142
எவ்வளவு கடனில் இருக்கிறாய்?

21:07.142 --> 21:09.269
- அது உன் பிரச்சினை இல்லை.
- எனில் நிறைய கடன்.

21:10.062 --> 21:11.355
இந்த பேப்பர் கிளிப் சூதாட்டம் எல்லாம்

21:11.355 --> 21:13.690
நிஜத்தை மறைப்பதற்கான பொய்க் கதை.

21:13.690 --> 21:16.443
- நீ ஒரு நண்பனாக என்னிடம் வந்திருக்க வேண்டும்.
- நண்பனாக உன்னிடம் வந்திருக்க வேண்டுமா?

21:16.443 --> 21:19.446
நீ நண்பராக இருக்க விரும்பினால், இந்த மாதத்திற்குள்
பத்தாயிரம் பவுண்ட் கொடு.

21:19.446 --> 21:20.906
இல்லையெனில், என் வீட்டை இழப்பேன்,

21:20.906 --> 21:23.200
கேஸிக்குத் தெரியும்போது, என் திருமண
வாழ்க்கையையும் இழப்பேன், சரியா?

21:23.200 --> 21:29.456
பத்தாயிரம்! எனக்கு பத்தாயிரம் தேவை,
முன்னாள் போதை ஆசாமியின் அறிவுரை இல்லை.

21:41.051 --> 21:42.761
- காஃபிக்கு நன்றி.
- நான் அதில் சிறுநீர் கழித்துள்ளேன்.

21:56.567 --> 21:58.277
லவாண்ட் என்ற ஃபிரெஞ்சு நகரம்.

21:58.277 --> 22:01.071
அதைப் பற்றி எனக்கு சுவாரஸ்யம் என நீ
நினைக்கும் அனைத்தையும்

22:01.071 --> 22:02.531
ஐந்து நிமிடங்களில் கண்டுபிடிக்க வேண்டும்.

22:04.032 --> 22:05.325
அது கார்ட்ரைட் உடையதா?

22:05.325 --> 22:06.243
ஆம்.

22:06.827 --> 22:08.620
அவன் சாகவில்லை, முட்டாளே.

22:10.414 --> 22:12.916
- மெசேஜில் அப்படித்தான் கூறினீர்கள்.
- மீண்டும் படி.

22:17.838 --> 22:18.672
சரி.

22:18.672 --> 22:21.967
சோகமாக இருப்பதை நிறுத்தலாம்.
ரிவர் இப்போதைக்கு உயிருடன் இருக்கிறான்.

22:23.343 --> 22:24.803
- கடவுளே.
- அவர் என்ன கூறினார்?

22:24.803 --> 22:26.555
- இதை நான் நம்பவில்லை.
- ஒரு முடிவெடுங்கள்.

22:26.555 --> 22:30.100
- சரி, அவன் இறந்துவிட்டான். சரியா?
- இல்லை. என்ன நடக்கிறது என சொல்லுங்கள்.

22:30.100 --> 22:31.935
அவன் இறந்ததாக நீங்கள் கூறினீர்கள்.

22:31.935 --> 22:33.228
அதை மீண்டும் படித்தாயா?

22:33.228 --> 22:37.107
ஆம். “தாமதமாக வருவேன். இரவு முழுவதும்
கார்ட்ரைட்டின் உடலை அடையாளம் காட்டினேன்.”

22:37.107 --> 22:42.154
கார்ட்ரைட் இறந்ததாக அவர் கூறவில்லை. அவனது
உடலை அடையாளம் காட்டியதாகக் கூறியுள்ளார்.

22:42.821 --> 22:44.948
ஓ, அடக் கடவுளே.
யாராவது வாய்வு வெளியேற்றினீர்களா? யார்...

22:44.948 --> 22:47.284
எனக்கு சத்தம் மட்டும் கேட்டது,
ஆனால் எந்த நாற்றமும் வரவில்லை.

22:47.284 --> 22:48.785
நான் மனக் குழப்பத்தில் இருக்கிறேன்.

22:48.785 --> 22:50.162
நம் அனைவருக்கும் இது
மன அழுத்தமுள்ளதாகத்தான் இருந்துள்ளது.

22:50.162 --> 22:52.539
வாயை மூடு, முட்டாள். ரிவர் இறந்துவிட்டான் என
நினைத்தபோது நீ கவலைப்படவே இல்லை.

22:52.539 --> 22:55.083
- நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்.
- போய்த் தொலை.

22:55.083 --> 22:56.752
- நான் வெஸ்டேக்கர்ஸில் கிட்டத்தட்ட இறந்திருப்பேன்.
- நான்...

22:56.752 --> 22:58.545
- நீ பல தெருக்கள் தள்ளி இருந்தாய்.
- போய்த் தொலை.

22:58.545 --> 23:00.881
- இல்லை, வெஸ்டேக்கர்ஸில் உயிர்பிழைத்தவன், சரியா?
- துரதிர்ஷ்டவசம்தான்.

23:00.881 --> 23:01.965
எனில் யார் இறந்தது?

23:01.965 --> 23:08.055
ரிவரைப் போல இருக்கும் யாரையோ அவனது
தாத்தாவைக் கொல்ல அனுப்பியுள்ளனர்.

23:08.055 --> 23:10.349
ரிவர் தன் ஐடியை அவனது உடலில்
வைத்துள்ளான்.

23:10.349 --> 23:11.975
ரிவர் போலவே இருக்கும் ஒருவனா?

23:11.975 --> 23:13.894
ஆம், ஆனால் இப்போது அவனைப் போல இல்லை.

23:13.894 --> 23:17.314
அடையாளம் தெரியாமல் இருக்க, ரிவர்
அவனது முகத்தில் சுட்டுவிட்டான்.

23:17.314 --> 23:19.024
அருமை. நீங்கள் ஃபோட்டோ எதுவும்
எடுத்தீர்களா?

23:19.024 --> 23:21.276
மன்னிக்கவும், ஏன் அவன் இறந்தான்
என எங்களை நம்ப வைத்தீர்கள்?

23:21.276 --> 23:26.740
ஏனெனில் ஒரு ஏஜென்ட் மிஷனில் இருக்கும்போது,
அவனது அடையாளத்தை வெளியிடக் கூடாது.

23:30.160 --> 23:32.788
ஏஜென்டின் அடையாளத்தை வெளியிடக் கூடாது!

23:32.788 --> 23:34.581
தான் இறந்துவிட்டதாக பார்க் நினைக்க வேண்டும்
என்று ரிவர் விரும்பினான்.

23:34.581 --> 23:35.999
நீங்கள் அதையே பின்தொடர்கிறீர்கள்.

23:35.999 --> 23:38.252
நீங்கள் அனைவரும் அதை நம்புவது
அதற்கு துணையாக இருக்கும்.

23:38.919 --> 23:42.589
நீங்கள் அனுதாபப்பட்டு, சரியான
விஷயங்களைச் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

23:42.589 --> 23:43.674
யாரும் அனுதாபப்படவில்லை.

23:44.591 --> 23:47.010
ஓ, அடச்சே. அவனது அம்மாவிற்கு
மெசேஜ் அனுப்பியுள்ளேன்.

23:47.010 --> 23:49.930
- அவர் திரும்ப அழைத்தாரா?
- இல்லை இன்னும் இல்லை.

23:49.930 --> 23:52.516
எனில் இதில் நாம் மட்டும் இல்லை.
நல்லது.

23:52.516 --> 23:54.226
சரி. எங்கே அவன்?

23:54.226 --> 23:58.021
அவன் ஃபிரான்ஸில் இருக்கிறான், அந்தக்
கொலைகாரன் வந்த வழியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.

23:58.021 --> 23:59.189
ஃபிரான்ஸ் மிகவும் பெரியது.

24:01.733 --> 24:04.820
அருமை, வாட்சன். அவனுக்கு
யாராவது கோல்டு ஸ்டார் கொடுங்கள்.

24:04.820 --> 24:07.030
- டேவிட் எப்படி இருக்கிறார்?
- அவன் பாதுகாப்பாக இருக்கிறான்.

24:07.030 --> 24:09.533
சரி. ரிவருக்கு உதவ நம்மால் என்ன செய்ய முடியும்?

24:10.784 --> 24:12.119
அவனை விசாரிக்க விடுவோம்.

24:13.245 --> 24:17.457
அவன் ஃபிரான்ஸில் எங்கே இருக்கிறான்? நாங்கள் இங்கே
உட்கார்ந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருக்க மாட்டோம்.

24:17.457 --> 24:21.336
அப்படித்தான் இருக்க வேண்டும். அவனுக்கு உதவி
தேவைப்பட்டால் அவன் கேட்டிருப்பான்.

24:21.336 --> 24:24.089
ஆம். அவனுக்கு கம்ப்யூட்டரைத்
திரும்பத் தர மாட்டேன்.

24:49.364 --> 24:51.742
திரு லேம்ப், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

24:52.326 --> 24:54.244
அனுமதியின்றி இந்த இடத்தைச்
சுத்தம் செய்துவிட்டேன்.

24:55.746 --> 24:58.457
கொஞ்சம் அதிக வேலைதான்.
உங்களுக்குப் பிரச்சினையில்லை என நம்புகிறேன்.

24:59.583 --> 25:01.168
அது பெரிய மாற்றம்தான்.

25:02.920 --> 25:04.505
நீ மிகவும் ஆர்வத்துடன் செய்துள்ளாய்.

25:04.505 --> 25:07.382
நான் மிகவும் செயலூக்கத்துடன் இருப்பேன், அதனால்தான்
என்னை இங்கே அனுப்பியுள்ளனர்.

25:08.592 --> 25:09.843
அப்படியா?

25:09.843 --> 25:12.429
”உறுதியான மேனேஜர் தேவை”
என்று திரு. வீலன் கூறினார்.

25:12.429 --> 25:15.098
திரு. வீலன், ஆனால்...
ஆம், அவர் கூறியது தவறில்லை.

25:16.141 --> 25:18.352
நான் மதிய உணவு சாப்பிடச் செல்கிறேன்,
என்னுடன் சேர்ந்துகொள்கிறாயா?

25:19.978 --> 25:22.481
அது மிகவும் கனிவானது.
என் கோட்டை எடுத்து வருகிறேன்.

25:24.066 --> 25:27.319
மொத்தக் கட்டடத்தையும் ஒழுங்கமைப்பது
பற்றி நாம் பேசலாம்.

25:27.819 --> 25:28.987
ஆம், அருமை.

25:33.867 --> 25:36.119
அந்த அறை அப்படி இருக்கும்போது
என்னால் உள்ளே இருக்க முடியாது.

25:36.119 --> 25:37.871
முன்பிருந்தது போல அதை மாற்றுங்கள்.

25:42.626 --> 25:44.628
- போகலாம்.
- நீ முன்னே போ.

26:01.019 --> 26:02.771
- மதிய உணவு.
- நன்றி.

26:05.691 --> 26:08.235
எனக்கு டீயும் கிடைக்குமா?
இரண்டு சக்கரை.

26:12.865 --> 26:13.907
மேடம்.

26:13.907 --> 26:15.075
அவளிடம் ஃபோனைக் கொடு.

26:21.582 --> 26:23.333
- ஹலோ.
- அது ஒரு கோளாறு.

26:25.502 --> 26:27.337
- அது நல்லது என நினைக்கிறேன்.
- கண்டிப்பாக நல்லதுதான்.

26:27.337 --> 26:33.594
ராபர்ட் வின்டர், எஸ் இல்லாமல், என்பது 30
ஆண்டுகளுக்கு முன்பு நாம் உருவாக்கிய போலி ஐடி.

26:34.428 --> 26:36.263
ஆனால் ராபர்ட் வின்டர்ஸ் இல்லை.

26:37.222 --> 26:39.850
ராபர்ட் வின்டர்ஸ் மற்றும் வெஸ்டேக்கர்ஸுக்கும்
நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?

26:39.850 --> 26:43.103
எதுவும் இல்லை. அவனைப் பற்றி நம்
சிஸ்டம்மில் எதுவும் இல்லை.

26:43.103 --> 26:45.355
ஆனால் நன்றி, கீடி. அதாவது...

26:45.355 --> 26:49.109
இது வெளியே தெரிந்திருந்து,
தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால்...

26:49.109 --> 26:50.986
அது பேரழிவாக இருந்திருக்கும்.

26:50.986 --> 26:53.405
- நன்றி, மேடம்.
- ஃபிளைட்டிடம் ஃபோனைக் கொடு.

26:54.031 --> 26:54.865
ஃபிளைட்.

27:00.329 --> 27:02.080
- மேடம்.
- நீ இப்போது அவளை விடுவிக்கலாம்.

27:03.332 --> 27:05.459
மரியாதையுடன் சொல்கிறேன்,
நான் இதைவிட பெரிய வேலை செய்ய ஏற்றவள்.

27:06.126 --> 27:08.212
நீ இந்த வேலைகளில்
திருப்தியாக உணரவில்லை எனில்

27:08.212 --> 27:10.547
நான் வருந்துகிறேன், ஆனால் அதுதான் வேலை.

27:10.547 --> 27:13.300
இப்போது கார்ட்ரைட்டைத் தேடு அல்லது
அதுவும் உனக்குப் போதாதா?

27:13.300 --> 27:14.468
இல்லை, மேட...

27:27.105 --> 27:29.107
லெ பிளான்க் ரூஸ்

27:48.418 --> 27:49.419
வணக்கம்.

27:51.171 --> 27:52.172
வணக்கம்.

27:55.092 --> 27:57.094
ஒரு லாட்டே.

28:07.354 --> 28:08.605
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?

28:10.107 --> 28:11.275
இல்லை.

28:14.611 --> 28:17.656
என்னைப் போல... இருக்கும் ஒருவன்...

28:18.448 --> 28:22.452
அவன் இங்கே சில நாட்களுக்கு முன் வந்திருந்தான்.

28:23.453 --> 28:24.288
ஆம்.

28:24.288 --> 28:25.706
- எனக்கு அவனைத் தெரியும்.
- அப்படியா?

28:26.206 --> 28:27.541
ஆம்.

28:29.168 --> 28:31.753
அவன் வீடு இங்கே உள்ளதா?

28:31.753 --> 28:33.255
தெரியாது.

28:33.255 --> 28:35.007
லவாண்டில் இல்லை.

28:35.007 --> 28:36.550
அவன் லெஸ் ஆர்பாவைச் சேர்ந்தவன்.

28:36.550 --> 28:38.302
- லெஸ் ஆர்பாவா?
- லெஸ் ஆர்பா. ஆம்.

28:39.052 --> 28:40.512
அது எங்கே உள்ளது?

28:41.680 --> 28:44.808
நேராக மூன்று கிலோமீட்டர் சென்றால்,
காட்டில் இருக்கும்.

28:45.559 --> 28:46.560
சரி.

28:48.896 --> 28:49.897
நன்றி.

29:11.084 --> 29:12.836
அது அவன்தான்.

29:13.795 --> 29:15.839
அவன் லெஸ் ஆர்பாவுக்குச் செல்கிறான்.

29:15.839 --> 29:17.674
நான் அவனைக் கண்காணிக்கிறேன்.

29:30.270 --> 29:32.105
இந்த ரகசியச்
சந்திப்பிற்கு மன்னிக்கவும்.

29:34.233 --> 29:35.609
உண்மையில் இது உற்சாகமாக உள்ளது.

29:35.609 --> 29:39.112
எனக்கு, ஏனெனில்,
உங்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை,

29:39.112 --> 29:41.532
நான் இதற்கு முன் ஃபீல்டில்
இறங்கியதில்லை.

29:43.909 --> 29:47.371
மேலும்... அதாவது, இது ஏன் அவசியம்?

29:47.371 --> 29:49.831
சில உரையாடல்கள் யாருக்கும்
தெரியாமல் இருப்பது சிறந்தது.

29:49.831 --> 29:50.916
சரி.

29:53.377 --> 29:54.962
என்ன... நாம் எங்கே செல்கிறோம்?

29:56.296 --> 29:58.841
எங்கே வேண்டுமானாலும். பஸ்ஸில்
இது சரியாக இருக்கும்.

30:02.094 --> 30:03.929
ராபர்ட் வின்டர்ஸ் நம்மில் ஒருவனாக இருந்தவன்.

30:03.929 --> 30:07.766
கடவுளே. என்ன, அவன் ஏஜென்டாக இருந்தானா?

30:08.267 --> 30:09.893
- அப்படியில்லை.
- அவன் அசெட்டாக இருந்தானா?

30:09.893 --> 30:12.312
பனிப்போரின் முடிவில் இருந்த, பயன்படுத்துவதற்குத்
தயாராக உருவாக்கிய அடையாளம்.

30:12.312 --> 30:13.772
அப்படி என்றால் என்ன அர்த்தம்?

30:13.772 --> 30:15.732
அது ரெடிமேட் அடையாளம்.

30:16.358 --> 30:20.320
பிறப்புச் சான்றிதழ்,
பாஸ்போர்ட், தேசிய காப்பீட்டு எண்,

30:20.320 --> 30:22.197
வங்கிக் கணக்கு, கிரெடிட் ரேட்டிங்.

30:22.197 --> 30:23.490
எதுவும் போலியில்லை.

30:23.490 --> 30:26.702
அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட,
உண்மையான ஆவணங்கள்.

30:26.702 --> 30:29.246
இப்போது அதையெல்லாம் ஆன்லைனில் செய்கிறொம்,
கடந்தகாலத்தில் அது மிகவும் கடினம்.

30:29.246 --> 30:31.999
மன்னிக்கவும், இதைப் பற்றி எவ்வளவு நாளாக உங்களுக்கு
தெரியும்? யார் இதைக் கூறியது?

30:31.999 --> 30:33.083
என் ஏஜென்டுகளில் ஒருவர்,

30:33.750 --> 30:36.503
- கீடி ரஹ்மான், சில மணிநேரத்திற்கு முன்.
- கீடி... எனக்கு...

30:36.503 --> 30:39.006
அவள் அதை விசாரிக்காமல் இருக்க,
அது ஒரு கோளாறு என்று கூறிவிட்டேன்.

30:39.756 --> 30:41.008
அது ஒரு தவறு.

30:41.008 --> 30:44.428
அது உங்களுக்குத் தெரிந்தவுடன்
என்னிடம் கூறியிருக்க வேண்டும்.

30:44.428 --> 30:46.221
கூறியிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?

30:47.764 --> 30:49.016
பிரதமரிடம் கூறியிருப்பேன்.

30:49.850 --> 30:54.605
எப்படி நிறைய கொலைகளைச் செய்தவன், எம்ஐ5 இன்
அடையாளத்தைப் பயன்படுத்தினான் என்று

30:54.605 --> 30:57.024
- விசாரணையைத் தொடங்கியிருப்பேன்.
- ஆம், அப்படித்தான் நினைத்தேன்.

30:57.024 --> 30:59.651
- அது பேரழிவாகியிருக்கும்.
- இது ஏற்கனவே பேரழிவுதான், டயானா.

30:59.651 --> 31:01.862
இல்லை, ஏனெனில் நான்
ஏற்கனவே பதிவுகளை அழித்துவிட்டேன்.

31:01.862 --> 31:04.198
நம் கட்டடத்தில் ராபர்ட் வின்டர்ஸ் தொடர்பான

31:04.198 --> 31:05.782
- அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது.
- அடக் கடவுளே.

31:06.617 --> 31:10.621
இல்லை. இஸ்தான்புல் விஷயத்திற்குப் பிறகு இதுபோன்ற
ஒன்றை நாம் மறைக்கக் கூடாது. உங்களுக்கே தெரியும்.

31:10.621 --> 31:13.624
அதனால்தான் இதை நாம் மறைக்க வேண்டும்.

31:13.624 --> 31:15.459
இதைப் பற்றி சிறிதாக வெளியேறினாலும்,

31:15.459 --> 31:18.670
பாதுகாப்புச் சேவைகளுக்கு இருக்கும் கொஞ்சம்
நம்பகத்தன்மையும் நாசமாகிவிடும்.

31:18.670 --> 31:21.340
மன்னிக்கவும், என்னால் இதை மறைக்க முடியாது.
நான் இதைச் செய்ய மாட்டேன்.

31:21.340 --> 31:22.841
ஓ, கிளாட்.

31:29.014 --> 31:30.015
என்ன இது?

31:30.516 --> 31:33.143
இது, கீடி ரஹ்மானைத் தனிமைப்படுத்துவதற்காக
நீங்கள் இன்று கையொப்பமிட்ட,

31:33.143 --> 31:34.811
சி & சி உத்தரவு.

31:36.063 --> 31:38.065
நீங்கள் இந்த மூடி மறைக்கும் விஷயத்தில் பகுதியாக
இருப்பதாகக் காட்டுவது.

31:42.486 --> 31:43.487
ஆம், ஆனால் நான்...

31:45.489 --> 31:47.491
நான் இதைப் படிக்கவில்லை.

31:48.283 --> 31:51.578
இல்லை. ஆனால் கையொப்பமிட்டீர்கள்.

31:52.704 --> 31:56.583
நீங்கள் வின்டர்ஸின் ஆவணங்களை
அழிப்பதில் உதவியுள்ளீர்கள்.

31:57.167 --> 31:59.169
எனக்கு இந்த வேலை கிடைத்ததால்
இப்படிச் செய்கிறீர்களா?

31:59.878 --> 32:01.922
உங்களுக்குப் பதிலாக எனக்கு இந்த வேலை
கிடைத்ததால் இப்படிச் செய்கிறீர்களா?

32:01.922 --> 32:03.298
இதெல்லாம் அதனால்தானா?

32:03.298 --> 32:05.759
நான் அதற்கு விண்ணப்பிக்கவில்லை.

32:05.759 --> 32:11.348
ஆம். இல்லை. உங்களுக்குக் கிடைக்காது
என உங்களுக்குத் தெரிந்திருந்தது, சரியா?

32:11.348 --> 32:13.058
அதனால்தான் பின்வாங்கினீர்கள்.

32:13.934 --> 32:15.727
இருந்தாலும், அதை நான்தான் செய்கிறேன்.

32:17.563 --> 32:20.691
புலனாய்வுத் துறையை நடத்த
மேலோட்டமான விஷயம் இல்லை.

32:20.691 --> 32:23.193
தினமும் நடக்கும் பிரச்சினைகளைச்
சரிசெய்ய வேண்டும்.

32:23.193 --> 32:25.237
இது எனக்கு ஏதோ
இங்கே வேலை பார்த்தவனின்...

32:25.237 --> 32:27.614
- நீங்கள் நினைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
- ... மனக்களைப்பு போலத் தெரிகிறது.

32:28.282 --> 32:31.118
இன்னொரு வெஸ்டேக்கர்ஸ் சம்பவத்தைத்
தடுப்பதுதான் எனக்கு முக்கியம்.

32:32.035 --> 32:37.207
மக்களிடையே சுய பெருமைசாற்றிக்கொள்ள வேண்டிய
உங்கள் தேவை அதன் குறுக்கே வரும்.

32:37.207 --> 32:40.127
ஆம், உங்கள் வேலையைத் தக்கவைக்க
வேண்டும். அதுதானே?

32:40.127 --> 32:44.339
- ஆம், ஏனெனில் அதில் நான் கைதேர்ந்தவள்.
- ஓ, அப்படியா?

32:45.507 --> 32:47.092
நீங்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

32:54.725 --> 32:57.227
மன்னிக்கவும், சார்.
எனக்கு உதவ முடியுமா?

32:58.312 --> 33:03.859
நான் சிஸிங்ஹர்ஸ்ட்டைத் தேடுகிறேன்?
அதாவது, அந்தத் தோட்டம்.

33:03.859 --> 33:06.653
ஓ, இல்லை. நீங்கள் எதிர்த்திசையில் வந்துள்ளீர்கள்.
அது டன்பிரிட்ஜ் வெல்ஸின் மறுபக்கம் உள்ளது.

33:06.653 --> 33:09.489
நீங்கள் மெயின் ரோட்டிற்குத் திரும்பிச் சென்று,
நகரத்திற்குள் இடது பக்கம் செல்ல வேண்டும்.

33:09.489 --> 33:11.491
அங்கே அறிவிப்புப் பலகைகள் இருக்கும்.

33:11.491 --> 33:13.535
நான் இங்கே குறுக்கு வழி
என்று வந்துவிட்டேன்.

33:13.535 --> 33:15.412
இல்லை. இது தனியார் உடைமை.

33:15.996 --> 33:17.164
இங்கே என்ன நடந்தது?

33:17.915 --> 33:20.417
நீங்கள் ரோந்தில் உள்ளீர்களா?

33:20.417 --> 33:21.919
ஒரு சம்பவம் நடந்தது.

33:22.711 --> 33:26.423
அடக் கடவுளே. என் கெஸ்ட்ஹவுஸில் இருந்த பெண்
இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

33:26.423 --> 33:29.092
ஒரு வயதானவர் சுடப்பட்டுவிட்டார். மோசம்.

33:29.843 --> 33:31.220
அதுவும் இதுபோன்ற இடத்தில்.

33:31.762 --> 33:33.847
அவரது பேரன்தான் கொல்லப்பட்டது.

33:36.016 --> 33:37.267
சிறுவயதிலேயே.

33:38.352 --> 33:41.772
இன்னும் மோசம்.
அந்தக் குடும்பத்திற்கு மிகவும் சோகமாக இருக்கும்.

33:43.524 --> 33:44.733
மோசமான காலம், இல்லையா?

33:46.109 --> 33:47.945
சரி, நன்றி.
இந்த நாள் இனிதாக இருக்கட்டும்.

34:11.385 --> 34:12.636
என்ன?

34:12.636 --> 34:13.971
டேவிட் இன்னும் உயிருடன் இருக்கிறான்.

34:13.971 --> 34:16.389
அவன் ஒருவேளை திரும்பி வந்தால் இருக்கட்டும் என,
கேமராவை வைத்துள்ளேன்.

34:17.641 --> 34:19.434
பேரன் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்,

34:19.434 --> 34:21.978
ஆனால் அது பெட்ராண்டாக இருக்கலாம்.
என்னால் அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

34:21.978 --> 34:26.233
பெட்ராண்டின் பாஸ்போர்ட்
மீண்டும் ஃபிரான்ஸிற்குள் வந்துள்ளது.

34:26.233 --> 34:28.443
நான் சுத்தம் செய்யும்போது, அவனுக்காக
இங்கே காத்திருக்கிறேன்.

34:28.443 --> 34:32.072
அது அவன் இல்லையெனில்?
அது இளம் கார்ட்ரைட்டாக இருக்கலாம்.

34:32.072 --> 34:33.991
அப்படி இருந்தால்,
நான் அவனைப் பார்த்துக்கொள்கிறேன்.

34:34.658 --> 34:36.409
நீ இரண்டாவது ஆளைக் கொன்றுவிடு.

34:36.409 --> 34:37.494
இன்னொரு கிழவன்.

34:38.328 --> 34:40.539
அவன் டேவிட் கார்ட்ரைட் அளவுக்கு
தொந்தரவு கொடுக்க மாட்டான் என நம்புவோம்.

34:40.539 --> 34:42.623
கமான், அவன் அவனிடம் பல ஆண்டுகளாக
வேலை செய்துள்ளான்.

34:42.623 --> 34:45.460
அவனுக்கு கார்ட்ரைட் பற்றித் தெரிந்தால்,
அவன் பதட்டமாகிவிடுவான்.

34:45.460 --> 34:46.545
ஆம். இருக்கலாம்.

34:47.420 --> 34:51.550
ஆனால் அவன் மறந்திருக்கலாம்.
அவன் ஏன் சாக வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்.

36:26.144 --> 36:29.106
எனக்கு போர்க்கும், மலிவான
சிவப்பு ஒயினும் வேண்டும்.

36:29.773 --> 36:31.483
நான் எதுவும் குடிக்காமல் இருக்கிறேன்.

36:31.984 --> 36:33.819
எனில் மலிவான சிவப்பு ஒயின் மட்டும்.

36:35.070 --> 36:36.071
நன்றி.

36:38.866 --> 36:41.368
பார்க்கில், நீ அனைத்திலும் இருந்தாய்தானே?

36:41.368 --> 36:43.954
பணியாளர்கள் அடிப்படையில்.
டேட்டாபேஸ் ராணிகளில் ஒருவர்.

36:43.954 --> 36:45.038
ஆம்.

36:45.831 --> 36:48.375
எனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில்,
யாரிடம் கேட்க வேண்டும் எனத் தெரியும்.

36:49.418 --> 36:52.588
ஸ்லௌ ஹவுஸிற்கு வந்தது,
தரமிறக்கம்தானே?

36:52.588 --> 36:56.008
நான் அதை அப்படிப் பார்க்கவில்லை.
எல்லா இடங்களிலும் சவால் இருக்கும்.

36:56.008 --> 37:00.637
உன்னை வீலன்தானே இங்கே அனுப்பினான்?

37:00.637 --> 37:02.890
- வெளிப்படையானவர்.
- ஆம்.

37:02.890 --> 37:06.935
அவர் தொடங்கியவுடனேயே என்னைத் தேர்வுசெய்தார்.
அவர் என்னிடம் திறமை இருப்பதைப் பார்த்தார்.

37:06.935 --> 37:09.021
கொள்கையற்ற எங்களை நீ சரிசெய்த பிறகு
என்னவாகும்?

37:09.021 --> 37:11.231
பார்க்கில் உன் வேலை திரும்ப கிடைக்குமா?

37:11.231 --> 37:13.609
உங்களைக் கொள்கையற்றவர்கள்
என்று கூற மாட்டேன்.

37:13.609 --> 37:14.693
நிஜமாகவா?

37:15.485 --> 37:20.574
ஹோ, மார்கஸ் லாங்ரிட்ஜ், ஷிர்லி டாண்டர்.
ரேண்டமாகத் தேர்வுசெய்த மூவர்.

37:20.574 --> 37:24.203
உண்மையில் கொள்கையற்றவர்
என்பது குறைவுதான்.

37:26.830 --> 37:28.498
நீ வேலை பார்க்கும் நிறுவனத்தால்

37:28.498 --> 37:31.919
உனக்கும் கெட்ட பெயர் கிடைக்கும்
என நினைக்கவில்லையா?

37:31.919 --> 37:33.003
இல்லை.

37:35.839 --> 37:38.091
- நான் வித்தியாசமானவள்.
- நிரப்புங்கள்.

37:40.093 --> 37:42.471
நீ ஸ்பெஷல் ஆனவள் என்று
ஏன் கூறுகிறாய் எனத் தெரிகிறது,

37:42.471 --> 37:44.723
ஏனெனில் உண்மையை ஏற்றுக்கொள்வது கடினம்.

37:44.723 --> 37:47.267
ஆனால் இரண்டு காரணங்களில்
ஒன்றுக்காகத்தான் நபர்களை ஸ்லௌ ஹவுஸிற்கு

37:47.267 --> 37:48.852
அனுப்புவார்கள் என உனக்குத் தெரியும்.

37:49.770 --> 37:53.607
ஒன்று, அவர்கள் அனைத்தையும் சொதப்புவார்கள்.
நீ கூறியது போல, நீ அப்படியில்லை.

37:53.607 --> 37:55.776
அதாவது, நீ என் அலுவலகத்தை அற்புதமாகச்
சீரமைத்துள்ளாய்.

37:55.776 --> 38:00.489
அதனால், நீ இனி அங்கே நுழையவே கூடாது.

38:01.323 --> 38:04.034
இரண்டு,
அவர்கள் யாரையாவது கோபப்படுத்தியிருப்பார்கள்.

38:04.034 --> 38:05.118
இதுதான் டீல்.

38:08.455 --> 38:12.668
நீ ஏன் என்னிடம் அனுப்பப்பட்டாய் என்பதை
நான் கண்டுபிடித்து,

38:14.127 --> 38:16.421
உன்னை பார்க்கிற்கே திருப்பி அனுப்புகிறேன்.

38:16.421 --> 38:17.714
அதற்குப் பதிலாக,

38:18.549 --> 38:22.302
டேட்டாபேஸில் இருக்கும் உன் நண்பர்களை
அழைத்து, டேவிட் கார்ட்ரைட் தன் வேலையில்

38:22.302 --> 38:24.972
எப்போது, ஏன் ஃபிரான்ஸ் சென்றான்

38:24.972 --> 38:27.516
என்று எனக்குச் சொல்ல வேண்டும்.

38:33.689 --> 38:35.357
- சரி.
- ஆம்.

43:02.291 --> 43:04.293
ராபர்ட் வின்டர்ஸ். அடச்சே.

43:56.386 --> 43:57.387
போய்விடு!

43:58.347 --> 43:59.473
போய்விடு!

44:19.243 --> 44:20.244
நன்றி.

46:06.183 --> 46:08.185
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
