WEBVTT

00:18.852 --> 00:22.231
- கடவுளே, என்ன நடந்தது?
- நான் உன்னைக் காப்பாற்றினேன்.

00:22.231 --> 00:24.191
நீ அந்தச் சண்டையில் கேவலமாகத்
தோற்றுக்கொண்டிருந்தாய்.

00:24.191 --> 00:26.944
என் உடல் முன்பு போல இல்லை. மீண்டும்
ஜிம்முக்குச் செல்ல வேண்டும்.

00:26.944 --> 00:28.654
அவனை அடையாளம் தெரிந்ததா?

00:28.654 --> 00:31.865
இல்லை. வெளிநாட்டுக்காரன்.
தொழில்முறைக் கொலைகாரன்.

00:31.865 --> 00:34.243
நாங்கள் நான்கு பேர் மற்றும் ஒரு கார்
மோதியும் அவன் தப்பித்திருக்கிறான்.

00:34.243 --> 00:35.410
நான்கு பேர் இல்லை.

00:35.410 --> 00:37.913
இவர்கள் இருவரும் ஒருவருக்குச் சமம்.
உன்னை கணக்கிலேயே சேர்க்க மாட்டேன்.

00:37.913 --> 00:39.748
- அவளுக்கு என்ன பிரச்சினை?
- அனைவரும்தான்.

00:39.748 --> 00:41.333
- லவாண்ட் பற்றிச் சொல்.
- லவாண்டா?

00:41.333 --> 00:45.087
ஆம், நீ முதன்மை ஏஜென்ட் ஆகும் முன், நீ
டேவிட் கார்ட்ரைட்டின் பேக்மேனாக இருந்தாய்.

00:45.087 --> 00:46.839
- அவன் உன்னை அங்கு அனுப்பினான்.
- அடக் கடவுளே.

00:49.842 --> 00:51.552
இது லெஸ் ஆர்ப் பற்றியது.

00:52.928 --> 00:53.929
ஃபிரெஞ்சு மரங்களா?

00:53.929 --> 00:56.974
அது ஒரு காம்பௌண்ட். கண்டறிய முடியாதது.
அவர்கள் கெட்டவர்கள்.

00:57.474 --> 00:59.268
ஆபத்தானவர்கள். தொழில்முறைக் கொலைகாரர்கள்.

00:59.268 --> 01:01.395
இந்த விஷயம் பற்றி பார்க்கிற்குத்
தெரிவதை நான் விரும்பவில்லை, ஜாக்சன்.

01:01.395 --> 01:04.940
என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது. பார்க்கில் சென்று,
நான் செய்ததைக் கூறினால், வெளியே வர மாட்டேன்.

01:04.940 --> 01:06.316
ஏன்? என்ன செய்தீர்கள்?

01:08.735 --> 01:10.445
அலுவலகத்தில் நான் விளக்கமாகக் கூறுகிறேன்.

01:11.321 --> 01:12.906
ஓ, ஆம். சிறுவர்கள் முன்னிலையில் வேண்டாம்.

01:12.906 --> 01:13.991
நியாயம்தான்.

02:26.396 --> 02:29.900
கொஞ்சம் பாதுகாப்பு அதிகமாகத் தெரிகிறதே,
இல்லையா?

02:29.900 --> 02:31.652
நாம் பேசப் போகிறோம் என நினைத்தேன்.

02:32.194 --> 02:33.195
எனில் பேசு.

02:34.029 --> 02:39.618
இளவரசே, முதலில் என்
மன்னிப்புடன் தொடங்குகிறேன்.

02:39.618 --> 02:42.621
வெஸ்டேக்கர்ஸ் திட்டமிட்டப்படி நடக்கவில்லை.

02:42.621 --> 02:45.082
நம் பணி நிமித்தமான உறவிற்கான
நல்ல தொடக்கம் இல்லை.

02:45.082 --> 02:49.044
திரு. ஹார்க்னெஸ், என் நாட்டின் பாதுகாப்பு
அமைப்பிற்குள்ளேயே

02:49.044 --> 02:50.170
நீ செய்வதைச் செய்யும் நபர்கள் உள்ளனர்.

02:50.879 --> 02:53.507
நான் இதை உன்னிடம் கொடுத்ததற்கான காரணம்

02:53.507 --> 02:57.010
நீ புத்திசாலி என்றும் எந்தத் தடயத்தையும் விட
மாட்டாய் என்றும் கூறினார்கள்.

02:57.010 --> 03:01.598
வழக்கமான சூழ்நிலைகளில், அப்படித்தான்.
அதுதான் என் வேலை.

03:02.349 --> 03:06.562
துரதிர்ஷ்டவசமாக,
பல நிகழ்வுகள்...

03:06.562 --> 03:07.980
உனக்கு எதற்கு நான் பணம் கொடுத்தேன்?

03:10.524 --> 03:11.483
கொலை செய்ய.

03:12.359 --> 03:16.446
வெஸ்டேக்கர்ஸ் பார்க்கிங் இடத்தில்
விபத்து போலத் தெரிவதற்காக.

03:16.446 --> 03:17.781
நீ அதை சொதப்பிவிட்டாய்.

03:17.781 --> 03:20.909
இல்லை. அதுதான் பிரச்சினையின் பகுதி.

03:20.909 --> 03:24.204
என் நிறுவனத்தில் நான் கண்டறிந்திருக்க வேண்டிய
பலவீனமான விஷயம் இருந்தது.

03:24.204 --> 03:26.039
அடுத்த முறை நான் சரியாகச் செய்வேன்.

03:26.039 --> 03:27.165
அடுத்த முறையா?

03:27.165 --> 03:31.170
நான் ஒப்பந்தத்தை தள்ளுபடியில் நிறைவேற்றுகிறேன்.

03:31.170 --> 03:32.504
இல்லை.

03:35.924 --> 03:37.134
எனவே...

03:40.762 --> 03:41.680
நான் ஏன் இங்கே வந்துள்ளேன்?

03:42.681 --> 03:46.852
வெஸ்டேக்கர்ஸுக்கும் எங்களுக்கும் தொடர்பிருப்பது
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தெரிந்தால்,

03:46.852 --> 03:49.688
அது கூறப்படாத அரசாங்க சேதத்தை ஏற்படுத்தும்.

03:50.189 --> 03:52.482
எங்களை அந்த குண்டு வெடிப்புடன்
தொடர்புபடுத்தும் எதையும் அழிக்க விரும்புகிறோம்.

03:52.482 --> 03:57.029
சரி. நாம் இந்த நாடகத்தை
விட்டுவிடுவோம், சரியா?

03:57.029 --> 03:59.406
உங்களுக்கு நிஜமாகவே என்ன
வேண்டும் என்று...

03:59.406 --> 04:00.908
இது நடக்காமல் இருந்திருக்க விரும்புகிறேன்.

04:01.825 --> 04:03.410
இந்தத் தடத்தை அழிக்க விரும்புகிறேன்.

04:03.410 --> 04:05.787
அட. நீங்கள் என்னை அழிக்கப் போவதில்லை.

04:05.787 --> 04:08.832
உடலை வெட்டும்போது எவ்வளவு சத்தம்
வரும் என எனக்குத் தெரியும்.

04:08.832 --> 04:11.835
அதனால்தான் இதற்கு மேலும் கீழும்
உள்ள தளத்தை முன்பதிவு செய்துவிட்டோம்.

04:11.835 --> 04:13.337
சரி. முழுமையாக பணத்தைத்
திருப்பித் தருகிறேன்.

04:14.630 --> 04:17.048
அடுத்த ஐந்து வேலைகளை இலவசமாகச்
செய்கிறேன்.

04:18.257 --> 04:19.760
ஓ, அடச்சே.

04:21.970 --> 04:24.223
பிறருக்கும் வெஸ்டேக்கர்ஸ் பற்றித் தெரியும்.

04:24.223 --> 04:27.351
உன் உடல் அசைவின்றி இருக்கும், ஆனால்
நீ விழித்திருப்பாய்.

04:28.227 --> 04:29.520
நான் அதைப் பார்த்து ரசிப்பேன்.

04:30.938 --> 04:34.399
என்னைக் கொன்றாலும், விஷயம் தெரிந்தவர்கள்
இன்னும் வெளியே இருக்கின்றனர்.

04:36.401 --> 04:37.402
யார்?

04:39.071 --> 04:40.572
முன்னாள் ஏஜென்டுகள்.

04:40.572 --> 04:42.282
என்னிடமிருந்து பெயர்களை வாங்கும் முன்

04:42.282 --> 04:44.743
அவர்கள் பதுங்கிவிடுவார்கள் அல்லது
பார்க்கிடம் சென்றுவிடுவார்கள்.

04:44.743 --> 04:47.204
கமான். நானும் இது போகத்தான் விரும்புகிறேன்.

04:47.204 --> 04:49.540
அவர்கள் நள்ளிரவுக்குள் சாக வேண்டும்.

04:50.582 --> 04:51.959
அதன்பிறகு நீ எனக்கு வேலை
செய்ய வேண்டும்.

04:52.835 --> 04:53.836
நிச்சயமாக.

04:54.837 --> 04:58.715
அந்தக் கிழவர்களை இங்கே கூட்டி வந்து
நானே வெட்டிப் போடுகிறேன்.

05:44.636 --> 05:46.889
மிக் ஹெர்ரான் எழுதிய ஸ்பூக் ஸ்ட்ரீட்
புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது

06:12.664 --> 06:13.707
அடச்சே.

06:13.707 --> 06:14.875
ஏஜென்டுகள். அடச்சே.

06:14.875 --> 06:16.001
அவர்களுக்கு என்ன வேண்டும்?

06:16.668 --> 06:19.379
நானாக இருக்கலாம். நான் அவர்களது பாஸின்
நேரத்தை தொடர்ந்து வீணடிக்கிறேன்.

06:20.506 --> 06:22.925
ஃபோன் செய்து, அவர்கள் உள்ளே இருக்கின்றனரா
எனக் கேள்.

06:29.306 --> 06:30.807
அவர்கள் உள்ளே வந்துள்ளனரா?

06:30.807 --> 06:32.226
இல்லை.

06:32.226 --> 06:34.228
அவர்கள் ஜாக்சனின் வாசனையை
வாசலிலேயே முகர்கின்றனர்.

06:34.228 --> 06:36.688
இன்று நீ முதன்மை ஏஜென்டை
உள்ளே வரவிட்டுள்ளாய்.

06:36.688 --> 06:37.898
நான் ஏமாற்றப்பட்டேன்.

06:38.398 --> 06:42.402
அழகான பெண்கள்தான் என் ஒரே பலவீனம்,
அதனால்தான் நீ எனக்கு அச்சுறுத்தலாக இல்லை.

06:43.445 --> 06:44.571
அவர்கள் வெளியேதான் உள்ளனர்.

06:44.571 --> 06:46.990
- ஹோ இன்னும் முட்டாளாகவே உள்ளான்.
- சரி.

06:48.367 --> 06:49.576
இங்கேயே இருங்கள்.

06:49.576 --> 06:52.621
அவர்கள் என்னைப் பிடித்து, ஃபிளைட்
கார்ட்ரைட்டைப் பிடிக்கவில்லை எனில்,

06:52.621 --> 06:55.123
ரிவர் வரும் வரை அவனை அவர்களிடம்
சிக்க விடாமல் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

06:55.874 --> 06:59.628
நீ, தப்பிப்பதற்கான உன் பணம்
புதுப்பித்த நிலையில் இருக்குமென நம்புகிறேன்.

07:12.140 --> 07:13.475
- நீ மேலே வருகிறாயா?
- இல்லை.

07:13.475 --> 07:14.560
நான் உள்ளே வருகிறேனா?

07:14.560 --> 07:15.769
இல்லை, இப்போதுதான் பார்க் செய்தேன்.

07:16.353 --> 07:18.856
என்னால் இங்கே நிற்க முடியாது.
நான் நனைகிறேன்.

07:19.898 --> 07:21.066
நான் மேலே வருகிறேன்.

07:33.620 --> 07:35.080
நீ கால் செய்திருக்கலாம்.

07:35.080 --> 07:36.248
இங்கே வந்திருக்க வேண்டியிருக்காது.

07:36.248 --> 07:38.625
- கால் செய்தேன். பல முறை.
- நிஜமாகவா?

07:41.461 --> 07:42.838
ஆ, ஆம். கால் செய்துள்ளாய்.

07:43.589 --> 07:45.924
மன்னித்துக்கொள். என்ன? நீ அங்கே
தற்செயலாக பார்க் செய்துள்ளாய்.

07:45.924 --> 07:47.885
நீ ஃபிளைட்டிடம் பொய் கூறியுள்ளாய்.

07:47.885 --> 07:50.470
- ஆம்.
- இறந்தவன் ஒரு கொலைகாரன்.

07:51.388 --> 07:53.974
அதனால்தான் நீ உளவாளியாக இருக்கிறாய்.

07:53.974 --> 07:56.268
இப்போது டேவிட் கார்ட்ரைட்டை
ஏன் ஒருவர் கொல்ல விரும்ப வேண்டும்?

07:56.268 --> 07:57.352
அவரைச் சந்தித்தாயா?

07:57.853 --> 08:00.272
இந்த விஷயத்தில் ஏன் என்னைத் தொந்தரவு
செய்கிறாய் எனத் தெரியவில்லை.

08:00.272 --> 08:03.650
இனி வேறெந்த குண்டும் வெடிக்காமல் இருப்பதை
நீ உறுதிசெய்ய வேண்டாமா?

08:03.650 --> 08:05.652
ரிவர் கார்ட்ரைட் எங்கே?
அவன் என்ன செய்யப் போகிறான்?

08:05.652 --> 08:09.156
அவன் ஃபிரான்ஸில் இருக்கிறான், அந்தக் கொலைகாரனின்
தடத்தைப் பின்தொடர்கிறான்.

08:09.156 --> 08:11.241
அவனை என்னால் தொடர்புகொள்ள முடியாது.

08:11.241 --> 08:12.993
அவன் தன் தாத்தாவை எங்கோ
ஒளித்து வைத்துள்ளானா?

08:12.993 --> 08:16.455
அப்படித்தான் நினைக்கிறேன், ஆனால்
அவனை என்னால் தொடர்புகொள்ள முடியாது.

08:16.455 --> 08:19.416
அவன் கேத்ரின் ஸ்டாண்டிஷின் வீட்டில் இருப்பதாக
ஃபிளைட்டிடம் கூறினேன்,

08:19.416 --> 08:20.709
அவளைத் துரத்துவதற்காக.

08:21.543 --> 08:22.377
என்ன?

08:22.377 --> 08:25.672
என்ன, அவள் உன்னிடம் கூறவில்லையா?
அது அவமரியாதையானது.

08:25.672 --> 08:28.592
எந்த கார்ட்ரைட் வந்தாலும்,
என்னிடம் முதலில் சொல்ல வேண்டும்.

08:29.927 --> 08:32.513
அதை எந்தப் பிரதிபலனும் இல்லாமல்
நல்ல இதயத்துடன் கூற வேண்டுமா?

08:32.513 --> 08:34.806
எந்த நல்லது?
எந்த இதயம்?

09:00.749 --> 09:02.125
உங்களுக்கு கண்டிப்பாக டீ வேண்டாமா?

09:02.125 --> 09:03.210
இல்லை, பரவாயில்லை.

09:04.002 --> 09:05.003
ஸ்ட்ராங்காக எதுவும் வேண்டுமா?

09:08.340 --> 09:09.550
நான் காஃபியைக் கூறினேன்.

09:13.720 --> 09:15.889
அவர் அப்படிச் செய்வார்.
யாருக்கும் காரணம் தெரியாது.

09:16.807 --> 09:18.058
யாராவது அவரிடம் கேட்டீர்களா?

09:18.058 --> 09:20.477
சரியான தருணத்தைக் கண்டறிவது
கடினமாக உள்ளது.

09:21.520 --> 09:23.647
அவர் எதையோ வெளிவருவதைத் தடுக்கிறார்.

09:24.439 --> 09:27.067
தேடலில் உதவ அவரை வெளியே
அனுப்ப முடியாதா?

09:27.067 --> 09:30.320
நீங்கள் யாருக்கும் பொறுப்பில்லை.
தற்போது நீங்கள் இங்கே வேலை செய்யவில்லை.

09:30.320 --> 09:33.031
தற்போது என்றால் என்ன அர்த்தம்?
நான் திரும்பி வரப் போவதில்லை.

09:33.031 --> 09:37.953
இந்த வேலை காலியாகும், ஏனெனில்
நான் பார்க்கிற்குப் போகப் போகிறேன்.

09:49.798 --> 09:50.799
ஹேய்!

09:52.718 --> 09:54.261
அருமை, லாங்ரிட்ஜ்.

09:59.308 --> 10:00.809
என்னவொரு முட்டாள்.

10:08.734 --> 10:10.527
- அவன் எங்கே?
- கேத்ரின்?

10:11.111 --> 10:12.821
- திரும்ப வந்துவிட்டீர்களா?
- இல்லை.

10:12.821 --> 10:14.781
டேவிட் கார்ட்ரைட், அந்த வயதான முட்டாள்,

10:14.781 --> 10:16.992
அவன் மேலே இருக்கிறானா அல்லது
ஃபிரிட்ஜில் பூட்டி வைத்திருக்கிறாயா?

10:16.992 --> 10:18.243
அவரைத் தொலைத்துவிட்டார்.

10:19.077 --> 10:21.580
- ஃபிளைட் வருவதற்குள் அவரை இடமாற்றினேன்.
- எங்கே?

10:21.580 --> 10:22.998
- என் பக்கத்து வீட்டில்.
- சரி?

10:23.874 --> 10:26.376
- அவர் வெளியே சென்றுவிட்டார்.
- ஓ, அடக் கடவுளே, ஸ்டாண்டிஷ்.

10:26.376 --> 10:29.171
அவன் ஒரு ஜின் பாட்டிலாக இருந்தால்
தொலைத்திருக்க மாட்டாய்.

10:29.171 --> 10:33.050
அவர் இயக்குநரிடம் பேச விரும்புகிறார்,
எனவே அவர் பார்க்கிற்குப் போவார் என நினைக்கிறோம்.

10:33.050 --> 10:34.593
அவர் அங்கே சென்றால்,
லூயிசா அருகில்தான் இருக்கிறாள்.

10:34.593 --> 10:36.512
அதற்கு இன்னும் சிலரைக் கூட்டிச் செல்ல
இங்கே வந்தேன்.

10:36.512 --> 10:39.515
அவர் பக்கவாட்டு வாயிலில் செல்லலாம் அல்லது
உள்ளே செல்ல போலீஸிடம் கேட்கலாம்.

10:39.515 --> 10:41.767
கடவுளே, ஜாக்சன், அவன் பேசினால்
நான் பிரச்சினையில் மாட்டிக்கொள்வேன்.

10:41.767 --> 10:43.936
ஆம். அவன் மனநிலை சரியாக இல்லை.

10:43.936 --> 10:45.103
அவன் பார்க்கை எப்படிக் கண்டறிவான்?

10:45.103 --> 10:46.980
அவன் தொலைந்த நாய் போல
தெருவில் சுற்றுவான்.

10:46.980 --> 10:51.026
ஸ்க்ராட்ச் மற்றும் ஸ்னிஃப், நீங்கள் வெளியே சென்று
சுற்றுப்புறத்தைக் கண்காணியுங்கள்.

10:51.026 --> 10:53.362
- நான் அவர்களுடன் செல்கிறேன்.
- என்ன? மீண்டும் அவனைத் தொலைக்கவா?

10:53.904 --> 10:55.030
இல்லை, பரவாயில்லை.

10:55.864 --> 10:56.990
மேலே.

10:57.699 --> 10:59.618
- இதில் தலையிடாதே.
- ஏன்?

10:59.618 --> 11:00.786
அல்லது உன் விருப்பம்.

11:25.435 --> 11:26.603
நீ தாமதமாக வந்துள்ளாய்.

11:27.104 --> 11:28.856
சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

11:28.856 --> 11:30.983
- எங்கே?
- இடுப்பிலும் தோளிலும்.

11:31.650 --> 11:34.278
அதாவது, சிகிச்சைக்கு எங்கே சென்றாய்?

11:34.278 --> 11:35.362
டாக்டரிடம்.

11:38.866 --> 11:41.535
பெர்ட்ராண்டின் பாஸ்போர்ட் நகர்கிறது,

11:41.535 --> 11:45.914
எனில் ரிவர் கார்ட்ரைட் ஃபிரான்ஸில் இருந்து
திரும்பி வருகிறான்.

11:48.292 --> 11:50.711
இந்த டாக்டர் அமைதியாக இருப்பானா?

11:51.336 --> 11:53.463
நான் புறப்படும்போது அவன்
அமைதியாகத்தான் இருந்தான்.

11:53.463 --> 11:55.465
சாப்மனைக் கொன்றுவிட்டாயா?

11:56.675 --> 11:57.676
அவனுக்கு உதவி கிடைத்தது.

11:58.427 --> 11:59.428
யார்?

12:01.096 --> 12:02.097
தெரியவில்லை.

12:05.934 --> 12:08.103
இந்தத் தோளில்தான் அடிபட்டதா?

12:11.648 --> 12:13.775
கிளையண்ட்டுகள் மிகவும் அதிருப்தியாக உள்ளனர்.

12:13.775 --> 12:17.738
நாம் இலக்குகளைக் கொல்லவில்லை எனில்,
நம்மைக் கொன்றுவிடுவார்கள்.

12:17.738 --> 12:20.157
எனவே உன்னால் இதை முடிக்க முடியுமா?

12:21.325 --> 12:22.326
ஆம், சார்.

12:27.956 --> 12:28.957
சாப்பிடு.

12:33.629 --> 12:36.798
சாப்மனுக்கு உதவியவர்கள்
கார்ட்ரைட்டுக்கும் உதவலாம்.

12:36.798 --> 12:40.719
எனவே சாப்மனைக் கொல்லும் முன்
அவனிடம் தகவலை வாங்கிவிடு.

12:40.719 --> 12:42.554
அவனை எப்படிக் கண்டறிவது?

12:43.138 --> 12:44.848
அவன் பதுங்கிவிடுவான்.

12:44.848 --> 12:46.391
நம்மிடம் மாட்ட விரும்ப மாட்டான்.

12:46.934 --> 12:48.435
பார்க்கிடம் மாட்டவும் விரும்ப மாட்டான்.

12:48.435 --> 12:50.771
அட. இந்தக் கிழவன்களை எளிதாகக் கணிக்கலாம்.

12:50.771 --> 12:53.857
ஒரு ஏஜென்ட் பயந்துவிட்டால் என்ன செய்வான்?

12:53.857 --> 12:57.736
தான் தப்பிப்பதற்கான பணத்தை எடுத்துக்கொண்டு
தப்பிப்பான்.

12:59.112 --> 13:00.614
அது எங்கே உள்ளது என்று தெரியுமா?

13:10.791 --> 13:11.834
ஃபிரான்ஸ்.

13:12.334 --> 13:13.919
- அந்த ஒரு பயணம் மட்டுமா?
- ஆம்.

13:14.545 --> 13:16.380
அவன் ஒரு ஆளைக் கூட்டி
வருவதற்காக என்னை அனுப்பினான்.

13:17.297 --> 13:19.424
- விவரங்கள் எதுவும் கூறவில்லை.
- வழக்கமானதா?

13:19.424 --> 13:22.469
- தகவல் கூறாமலா?
- அவன் எப்படி என்று உனக்குத் தெரியுமே.

13:22.469 --> 13:23.554
ஆம்.

13:24.638 --> 13:26.598
அவனை வயதான முட்டாள் என்று அழைக்க
காரணம் உள்ளது.

13:26.598 --> 13:29.017
அப்போதைக்கு முட்டாள் மட்டும்தான்.

13:33.689 --> 13:35.065
நான் டோவரில் ஒரு காரை எடுத்தேன்.

13:36.066 --> 13:37.442
அதை ஆராய வேண்டாம் என்றான்.

13:37.442 --> 13:38.569
நல்ல வேளை நான் பார்க்கவில்லை,

13:38.569 --> 13:41.321
ஏனெனில் அதில் என்ன உள்ளது என்று தெரிந்திருந்தால்
சுங்கச் சாவடிக்குள் சென்றிருக்க மாட்டேன்.

13:42.281 --> 13:44.867
நான் லவாண்ட் சென்றதும், அவர்கள்
காரை அலசி ஆராய்ந்தார்கள்.

13:45.868 --> 13:46.952
யார்?

13:48.161 --> 13:49.288
கூலிப்படை.

14:05.679 --> 14:07.139
நான் தலைவனிடம் மட்டும்தான் பேசினேன்.

14:07.139 --> 14:08.974
அமெரிக்கன். பெயர் தெரியவில்லை.

14:10.184 --> 14:11.435
பயமுறுத்தக்கூடியவன்.

14:12.144 --> 14:13.228
அவர்களுக்கு என்ன கிடைத்தது?

14:14.605 --> 14:20.360
பணம், தோட்டாக்கள், சி-4 குண்டு,
டெட்டனேட்டர்கள் மற்றும் அடையாள ஆவணங்கள்.

14:25.407 --> 14:26.408
கோல்ட் பாடிகள்.

14:34.791 --> 14:39.129
உனக்கு அந்தப்
பெயர்கள் எதுவும் நினைவில்லைதானே?

14:39.129 --> 14:40.881
இல்லை, அவற்றை நான் நெருக்கத்தில் பார்க்கவில்லை.

14:42.257 --> 14:45.802
அதில் ஒன்று ராபர்ட் வின்டர்ஸ்
என்று நான் அடித்துக் கூறுவேன்.

14:46.595 --> 14:47.846
நான் கூறியது போல,
நான் பார்க்கவில்லை.

14:47.846 --> 14:49.598
அதற்குப் பதிலாக என்ன கிடைத்தது?

14:50.474 --> 14:51.975
யாரைக் காப்பாற்றினாய்?

14:51.975 --> 14:54.770
ஒரு பெண். இளம்பெண்.

14:59.942 --> 15:01.193
அந்த இடம் மோசமாக
இருந்தது.

15:04.071 --> 15:07.699
அந்தப் பெண்களும் சிறுவர்களும் இந்த
சைக்கோக்களைச் சுற்றி இருந்தனர்.

15:12.871 --> 15:14.289
அவள் போக விரும்பவில்லை.

15:15.499 --> 15:17.334
அவள் ஏன் தங்க விரும்பினாள் எனத் தெரியவில்லை.

15:26.677 --> 15:27.719
யார் அவள்?

15:28.470 --> 15:29.471
தெரியாது.

15:30.722 --> 15:32.724
திரும்பி வரும் வரை
அவள் பேசவேயில்லை.

15:34.393 --> 15:37.020
யூகேவில் நான் பெட்ரோலுக்காக நிறுத்தினேன்.
அவள் தப்பித்துவிட்டாள்.

15:40.566 --> 15:42.442
கார்ட்ரைட் அதற்கு
என்ன செய்தான்?

15:42.943 --> 15:43.944
எதுவும் செய்யவில்லை.

15:46.321 --> 15:48.991
அவள் தப்பிப்பதை அவன்
எதிர்பார்த்திருந்தது போலிருந்தது.

15:49.491 --> 15:51.326
பழைய கட்டடத்தில் நான் இதைத்
தெரிவித்தபோது, அவன்...

15:52.202 --> 15:54.204
என் மீது கோபப்பட்டு என்னை வேலையை விட்டுத்
தூக்குவான் என நினைத்தேன்.

15:54.204 --> 15:55.455
ஆனால் நான் அதற்குத் தயாராக இருந்தேன்...

15:55.455 --> 15:59.126
அவன் இயக்குநரிடம் அறிக்கையிட
விரும்பியதாகக் கூறினாய்.

15:59.126 --> 16:00.210
ஆம்.

16:02.045 --> 16:03.714
இல்லை, அவர் பார்க்கிற்குப் போகவில்லை.

16:03.714 --> 16:05.841
- அங்குதான் இயக்குநர் இருக்கிறார்.
- அவன் நினைவுக்கு இல்லை.

16:20.439 --> 16:21.565
- அடச்சே.
- மன்னிக்கவும்.

16:35.662 --> 16:37.372
எனக்கு உன்னைத் தெரியும்.

16:37.873 --> 16:40.083
சரி. என்னிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறாயா?

16:40.083 --> 16:41.668
- ஆம்.
- சரி. நன்றி.

16:42.169 --> 16:44.254
சரி, ஜோஷுவா? உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

16:45.214 --> 16:48.175
ஹாய். சரி. நமக்குக் கிடைத்ததில்
என்ன அப்டேட் உள்ளது, நண்பர்களே?

16:48.800 --> 16:51.887
அது அருமையான வேலை.
தொடர்ந்து விஷயங்களைத் தெரிவியுங்கள், சரியா?

16:51.887 --> 16:52.971
உள்ளே வா.

16:58.977 --> 17:02.022
நல்ல தோற்றம் இல்லையெனில்
அங்கே எதுவுமே இல்லை.

17:04.233 --> 17:05.233
மன்னிக்கவும்?

17:10.571 --> 17:12.031
உன்னைக் கூறவில்லை.

17:12.031 --> 17:14.785
ஆனாலும் நீ கொஞ்சம்
ஏமாற்றமாக மாறுகிறாய்.

17:14.785 --> 17:16.744
- நீ அதை எடுக்க வேண்டுமா?
- இல்லை.

17:17.746 --> 17:20.665
உனக்கு முன்பிருந்தவனும்
நானும் பிரிந்ததற்குக் காரணம்,

17:21.415 --> 17:24.169
கான்கிரீட் பிளாக்குடனான
அவனது மோதலைத் தாண்டி,

17:25.420 --> 17:27.172
தகவல்தொடர்பு இல்லாததுதான்.

17:30.425 --> 17:32.177
நீ என்னிடம் எதுவும் கூற வேண்டுமா?

17:35.556 --> 17:38.225
ரிவர் கார்ட்ரைட் இன்னும் உயிருடன் இருக்கிறான்.
லேம்ப் அந்த உடலைத் தவறாக அடையாளம் காட்டினார்.

17:38.225 --> 17:39.142
ஆம்.

17:39.142 --> 17:43.438
லேம்ப் பற்றி நான் எச்சரித்தேன், அதனால்தான்
அந்த ரத்தச் சோதனை முடிவை நானே பார்த்தேன்.

17:44.189 --> 17:47.359
ஆனால் இறந்து போன ஏஜென்ட்
உயிருடன் இருக்கிறான் என்ற முக்கியமான

17:47.359 --> 17:50.487
- விஷயத்தை ஏன் மறைத்தாய்?
- அதைக் கூறாததற்கு மன்னிக்கவும்.

17:50.487 --> 17:53.615
லேம்பை விசாரித்து உங்களுக்காக
சில பதில்களைப் பெற விரும்பினேன்.

17:53.615 --> 17:56.326
- அது எப்படிப் போனது?
- அதற்கான பதில் உங்களுக்கே தெரியும்.

17:56.326 --> 17:58.704
லேம்பின் கதையைக் கேட்டேன்.
உன் கதையைக் கேட்க விரும்புகிறேன்.

17:58.704 --> 18:01.957
அவர் என்னை கேத்ரின் ஸ்டாண்டிஷ் வீட்டிற்கு அனுப்பினார்,
அங்கே டேவிட் கார்ட்ரைட் இல்லை.

18:01.957 --> 18:03.584
அதுதான் லேம்ப்.

18:03.584 --> 18:05.711
நீ நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

18:05.711 --> 18:08.589
இன்னும் ஒரு முறை என்னிடம் எதையாவது மறைத்தால்
உன்னை பணிநீக்கம் செய்துவிடுவேன்.

18:09.173 --> 18:10.174
புரிந்ததா?

18:11.717 --> 18:12.843
சரி, மேடம்.

18:12.843 --> 18:15.137
- கார்ட்ரைட் குடும்பத்தைக் கொண்டு வா.
- சரி, மேடம்.

18:19.266 --> 18:21.977
ஆதாரம் எங்கே கூட்டிச் செல்கிறதோ அங்கே
செல்ல வேண்டும் என மெட்டில் கூறியுள்ளனர்.

18:21.977 --> 18:24.146
நீ இப்போது மெட்டில் இல்லை.
நீ எம்ஐ5 இல் இருக்கிறாய்.

18:24.146 --> 18:25.856
அதே கொள்கைகள் இங்கேயும்
பொருந்தும் என நம்புகிறேன்.

18:25.856 --> 18:29.484
எம்மா, நீ நினைப்பதற்கு மாறாக,
எனக்கு உன்னைப் பிடிக்கும்.

18:30.194 --> 18:33.864
ஒரே வேலையைப் பெறுவதற்கு எந்த ஆணையும் விட
நாம் இருவரும் மூன்று மடங்கு உழைக்க வேண்டும்.

18:33.864 --> 18:35.949
எனவே உன்னைப் பணிநீக்கம் செய்வதைவிட,
நீயாக ராஜினாமா செய்யும்போது

18:35.949 --> 18:38.368
கிடைக்கும் செவரன்ஸ் பேக்கேஜ் தொகை
மிக அதிகமாக இருக்கும்

18:38.368 --> 18:39.870
என நான் கூறும்போது

18:39.870 --> 18:42.456
அது உன் மீதிருக்கும் அக்கறையில்
கூறுவது என்பதைப் புரிந்துகொள்.

18:42.456 --> 18:43.916
உன் ராஜினாமா கடிதத்தை இப்போதே
எழுதுகிறாயா?

18:43.916 --> 18:46.084
மேடம், பழைய கட்டடத்திலிருந்து அழைக்கின்றனர்.

18:49.463 --> 18:51.340
நீ பழைய கட்டடத்தைக் கூறினாய்.

18:51.340 --> 18:54.801
- அவன் அங்குதான் செல்கிறான்.
- நீங்கள் லூயிசாவிடம் கூற வேண்டும்.

18:54.801 --> 18:56.261
அதை நிறுத்தும்படி.

18:56.261 --> 18:58.013
இல்லை. நான் அவளை அங்கே அனுப்பவில்லை.

18:58.013 --> 18:59.890
நீங்கள் மார்கஸையும் ஷிர்லியையும்
அனுப்பினீர்கள்.

18:59.890 --> 19:02.184
- அவர்களுக்கு கால் செய்கிறீர்களா?
- இல்லை, நீ கால் செய்.

19:03.101 --> 19:06.563
- என் ஃபோன் ரிவரிடம் உள்ளது.
- அடச்சே. கடவுளே.

19:06.563 --> 19:07.814
இந்தா. எடுத்துக்கொள்.

19:09.858 --> 19:12.027
- அது அவர்தானா?
- ஆம், மேடம்.

19:12.027 --> 19:15.364
சரி. நாங்கள் இப்போதே அங்கு வருகிறோம். அவர்
லாபியை விட்டு எங்கும் செல்ல விடாதீர்கள்.

19:15.364 --> 19:16.323
கண்டிப்பாக.

19:17.074 --> 19:18.659
அவரை இங்கேயே வைத்திருக்க
எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.

19:18.659 --> 19:21.078
- அவர் எதுவும் பிரச்சினை செய்கிறாரா?
- இல்லை. நன்றாக இருக்கிறார்.

19:21.078 --> 19:22.204
குழப்பத்தில் இருக்கிறார்.

19:22.788 --> 19:25.207
அவருக்காக ஒருவர் விரைவில்
வருவார் எனக் கூறியுள்ளேன்.

19:25.207 --> 19:26.834
நல்லது. சீக்கிரம் வந்துவிடுவோம்.

19:35.551 --> 19:36.969
- லூயிசா.
- ஹாய்.

19:36.969 --> 19:39.596
- இன்னும் அவர் வரவில்லை.
- வர மாட்டார்.

19:39.596 --> 19:41.098
அவர் பழைய கட்டடத்திற்குச் செல்கிறார்
என நினைக்கிறோம்.

19:41.098 --> 19:42.516
அடச்சே.

19:42.516 --> 19:43.642
என்ன?

19:49.189 --> 19:51.942
ஃபிளைட் இப்போதுதான் புறப்படுகிறார்.
அவருக்கு யாராவது கூறியிருக்கலாம்.

19:51.942 --> 19:55.028
இல்லை, மார்கஸும் ஷிர்லியும்
உன்னிடம் வருகின்றனர், சரியா?

19:55.529 --> 19:56.905
ஓ, ஆம். பார்த்துவிட்டேன்.

19:58.448 --> 20:00.033
ஃபிளைட்டும் அங்கே செல்கிறாள்.

20:00.033 --> 20:02.327
வரவேற்பாளர் அவர்களிடம்
கூறியிருக்க வேண்டும்.

20:02.828 --> 20:04.746
- அது இப்போது ஹோட்டலா?
- ஆம். மிகவும் ஆடம்பரமானது.

20:04.746 --> 20:08.292
ஆம், தண்டனை செல்கள் இப்போது
மசாஜ் சூட்களாக உள்ளன.

20:08.292 --> 20:09.793
அதில் இப்போதும் ரஷ்யர்கள்தான் உள்ளனர்.

20:09.793 --> 20:11.753
ஆம், நமக்கு முன் அவனை
பார்க் பிடித்துவிட்டால்,

20:11.753 --> 20:13.130
நானும் அந்த செல்லில் இருப்பேன்.

20:13.130 --> 20:15.465
நான் டேவிட்டைப் பாதுகாக்கவில்லை எனில்
ரிவர் என்னை மன்னிக்க மாட்டான்.

20:15.465 --> 20:17.384
உன் உணர்வுகளா என் சுதந்திரமா?

20:17.384 --> 20:19.052
அதில் அக்கறை இல்லாததற்கு
என்னை மன்னித்துவிடு.

20:19.803 --> 20:21.513
நீங்கள் அப்போதிலிருந்து மாறாததைப்
பார்க்க நன்றாக உள்ளது.

20:43.368 --> 20:45.245
டேவிட் கார்ட்ரைட்டைக்
கண்டுபிடித்துவிட்டோம்.

20:46.079 --> 20:47.080
அவர் நன்றாக உள்ளாரா?

20:47.581 --> 20:51.460
உடல் ரீதியாக, நன்றாக உள்ளார்,
எனக்குத் தெரிந்த வரை. மன ரீதியாக அப்படி இல்லை.

20:52.085 --> 20:54.379
அவர் பழைய கட்டடத்தில் இயக்குநருக்காகக்
காத்திருக்கிறார்.

20:54.963 --> 20:56.632
அவர் இங்கே வந்ததும் நான்
அவரை விசாரிக்கிறேன்.

20:56.632 --> 21:00.552
அதாவது, அவரது பேரன் பற்றி என்னிடமும் ஒரு
விஷயம் உள்ளது.

21:01.178 --> 21:03.931
ஆம், அதை உங்களிடம்
கூறக் காத்திருந்தேன்.

21:03.931 --> 21:06.183
அப்படியா? நான் காத்திருக்கிறேன்.

21:06.183 --> 21:07.726
அதை இப்போதே செய்வோமா?

21:17.236 --> 21:18.403
ஓ, கீடி.

21:18.946 --> 21:20.489
ஹெச்ஆர் இருக்க வேண்டுமா?

21:21.657 --> 21:23.200
அது வேடிக்கையானது.

21:23.200 --> 21:25.911
இல்லை. காப்பகங்களில் தேட நான்
கீடிக்கு அனுமதியளித்தேன்.

21:25.911 --> 21:30.082
கோல்ட் பாடி புரோகிராமில் வேறெந்தக் குறைபாடுகளும்
இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக.

21:30.082 --> 21:33.085
ஆனால் துரதிர்ஷ்டவசமாக,
அவள் ஒரு விஷயத்தைக் கண்டறிந்திருக்கிறாள்.

21:33.085 --> 21:34.378
ஆடம் லாக்ஹெட்.

21:36.046 --> 21:38.257
இப்போது நடக்கும் விஷயத்திற்கும் அந்தப்
பெயருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

21:38.257 --> 21:39.424
அப்படி இல்லை.

21:39.424 --> 21:43.804
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆடம் லாக்ஹெட் தன்
கடைசி புதுப்பிப்பிற்காகக் கொடுத்த படம் இதோ.

21:44.888 --> 21:47.432
இது எங்கேயோ பார்த்தது போல
உள்ளதா?

21:47.432 --> 21:49.059
லாக்ஹெட் - ஆடம்

21:49.059 --> 21:50.269
- ஆம்.
- அடக் கடவுளே.

21:50.269 --> 21:51.895
ஆம், அவன் மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டான்.

21:51.895 --> 21:54.189
ரிவர் கார்ட்ரைட் போலவே உள்ளான், இல்லையா?

21:55.858 --> 21:59.987
கார்ட்ரைட் தன் ஐடியை பிணத்தில் வைத்துவிட்டு,
ஆடம் லாக்ஹெட்டின் ஐடியை எடுத்திருக்க வேண்டும்.

21:59.987 --> 22:01.154
அப்படித்தான் இருக்கும்.

22:01.154 --> 22:02.573
அது சரியாக இருக்கிறது.

22:02.573 --> 22:04.366
டேவிட் கார்ட்ரைட்டின் கொலை முயற்சிக்கு
முதல் நாள் ஆடம் லாக்ஹெட்

22:04.366 --> 22:06.410
ஃபிரான்ஸிலிருந்து இங்கே வந்துள்ளான்.

22:06.410 --> 22:08.537
பிறகு டேவிட் மறைந்த அடுத்த நாள்
ஃபிரான்ஸிற்குச் சென்றுள்ளான்.

22:08.537 --> 22:11.415
எனவே வெஸ்டேக்கர்ஸுக்குப் பொறுப்பான
ஒரு கோல்ட் பாடி உள்ளது.

22:11.415 --> 22:14.084
சேவையின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் மீது
கொலை முயற்சி இன்னொன்று.

22:14.084 --> 22:17.296
அடுத்து என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான்
தெரியும். நாம் இதில் பெரிதாக சிக்கியுள்ளோம்!

22:17.296 --> 22:19.673
கீடி, இந்த ஐடியை இண்டர்போலிடமும்
DGSE இடமும் கொடு.

22:20.507 --> 22:22.092
அதை வேறெங்காவது செய்.

22:29.099 --> 22:31.518
பாருங்கள், இவை ஏதோ கடந்தகாலப் பாவங்கள்
என்று நினைத்துக்கொண்டு

22:31.518 --> 22:33.270
மறைத்து வைக்க முடியாது.

22:33.270 --> 22:36.315
இது இப்போது நடக்கிறது.
நிகழ்காலத்தில் நடக்கிறது.

22:36.315 --> 22:39.526
முதல் படி, நான் டேவிட் கார்ட்ரைட்டை
விசாரிக்கிறேன், பிறகு நாம்...

22:39.526 --> 22:40.485
இல்லை.

22:40.986 --> 22:45.073
இல்லை, நான் டேவிட் கார்ட்ரைட்டை விசாரிக்கிறேன்,
அடுத்த படிகளை நான் பார்க்கிறேன்,

22:45.073 --> 22:47.284
அது நம் அடையாள புரோகிராம்களின்
தணிக்கை மற்றும்

22:47.284 --> 22:49.119
நம் மேற்பார்வை நடைமுறைகளின்
மதிப்பாய்வாக இருக்கும்.

22:49.119 --> 22:51.580
அவற்றின் முடிவுகள் பொதுவில்
வெளியிடப்படும்.

22:52.080 --> 22:55.209
புனிதமான முட்டாளாக இருக்காதீர்கள்.

23:00.255 --> 23:01.256
நான்...

23:02.049 --> 23:04.843
ஒன்று சொல்கிறேன், டயானா, அதை
திரும்பப் பெற்றுக்கொள்ள உங்களை அனுமதிக்கிறேன்.

23:04.843 --> 23:08.096
அந்த தொனியைத் திரும்பப் பெறுகிறேன்,
ஆனால் விஷயத்தை இல்லை.

23:08.805 --> 23:13.018
என்ன நடந்தது என்ற விவரங்களை
நாம் கண்டறிந்து,

23:13.018 --> 23:15.687
- இன்னொரு குண்டு வெடிக்கப் போகிறதா என...
- ஆம்...

23:15.687 --> 23:18.565
...அறிய வேண்டும், நிர்வாக ஆலோசகர்களை
அழைக்கக் கூடாது.

23:18.565 --> 23:21.193
இந்த விஷயங்களை கமிட்டிகளிடமும்,
செய்தியாளர்களிடமும், மக்களிடமும் கூறினால்,

23:21.193 --> 23:22.277
அவர்களிடமிருந்து விலகவே முடியாது.

23:22.277 --> 23:24.696
கடைசியில் யார் கெட்டவர்களாகத் தெரிவது?

23:24.696 --> 23:25.864
நாம்தான்!

23:25.864 --> 23:27.157
நான் வேறெங்காவது செய்யச் சொன்னேன்.

23:27.157 --> 23:29.034
மன்னிக்கவும், மேடம்.

23:29.034 --> 23:31.036
ஆடம் லாக்ஹெட் லண்டன் வருவதற்கு
டிக்கெட் வாங்கியுள்ளான்.

23:31.036 --> 23:32.037
அவன் வருகிறான்.

24:03.402 --> 24:04.236
மேடம்.

24:04.236 --> 24:07.281
ஃபிளைட், டேவிட் கார்ட்ரைட்டை அழைக்க
ஒரு காரை அனுப்பிவிட்டு,

24:07.281 --> 24:09.116
மற்ற கார்களை செயின்ட் பான்க்ரஸுக்கு அனுப்பு.

24:09.116 --> 24:12.870
ரிவர் கார்ட்ரைட் பாரிஸிலிருந்து வருகிறான்.

24:12.870 --> 24:14.913
- சரி, மேடம், இப்போதே செல்கிறோம்.
- மன்னிக்கவும்.

24:34.975 --> 24:35.976
எனது படங்கள்

24:49.031 --> 24:51.366
சரி. நீங்கள் இருவரும் உள்ளே சென்று
அவனைக் கூட்டி வாருங்கள்.

24:51.950 --> 24:52.951
நாங்கள் ஏன்?

24:53.911 --> 24:55.621
ஏனெனில் அவன்
என்னை வெறுக்கிறான்.

25:15.140 --> 25:16.558
கார்ட்ரைட்டைப் பார்க்க முடிகிறதா?

25:16.558 --> 25:18.852
இப்போதுதான் வந்தோம். உள்ளே செல்கிறோம்.

25:26.527 --> 25:27.778
சரி. நான் டேவிட்டைக்
கூட்டி வருகிறேன்.

25:27.778 --> 25:29.363
- இல்லை, நான் டேவிட்டைக் கூட்டி வருகிறேன்.
- இல்லை.

25:29.363 --> 25:31.573
- நீ ஏஜென்டுகளை நிறுத்து.
- அதை எப்படிச் செய்வது?

25:31.573 --> 25:32.991
தெரியாது. ஏதாவது செய்.

25:32.991 --> 25:35.327
என்னால் முடியாது. அவர்களில் யாரேனும்
என்னை அடையாளம் காணலாம்.

25:42.668 --> 25:43.669
சார்.

25:45.420 --> 25:46.296
மன்னிக்கவும்?

25:47.548 --> 25:48.632
சாப்மன், சார்.

25:49.967 --> 25:51.426
பேட் சாம். நினைவுள்ளதா?

25:55.097 --> 25:56.098
கடவுளே.

25:56.807 --> 25:58.475
பேட் சாம்.

25:58.475 --> 26:01.144
நீ எப்போதும் என்னிடம் நன்றாக
நடந்துகொண்டாய்.

26:02.396 --> 26:03.397
இங்கே என்ன செய்கிறாய்?

26:03.397 --> 26:04.815
நாம் செல்லும்போது
அதை விளக்குகிறேன், சார்.

26:04.815 --> 26:05.899
எங்கே செல்லும்போது?

26:06.525 --> 26:08.277
நான் இயக்குநருக்காகக் காத்திருக்க வேண்டும்.

26:32.885 --> 26:33.886
என்ன அது?

26:34.386 --> 26:36.305
- அத்துமீறி யாரும் நுழைந்துள்ளனரா?
- இல்லை, இது சோதனைதான், சார்.

26:36.305 --> 26:38.390
- போகலாம்.
- இல்லை. நான் காத்திருக்க வேண்டும்.

26:38.390 --> 26:40.601
நீங்கள் காத்திருக்க வேண்டாம், சார்.
உங்களைக் கூட்டிச் செல்ல நான் வந்துள்ளேன்.

26:40.601 --> 26:42.144
இல்லை... என்னிடம் யாரும் கூறவில்லை...

26:42.728 --> 26:45.939
- நீ இங்கே வேலை செய்துள்ளாயா?
- ஆம், கடந்த சில ஆண்டுகளாக.

26:45.939 --> 26:47.274
இறுதியில் ஒழுங்கற்றுப் போய்விட்டது.

26:47.274 --> 26:49.651
மன்னிக்கவும், மக்களே.
நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள்.

26:49.651 --> 26:50.694
நன்றி.

26:50.694 --> 26:51.945
எனக்கு முன் நீ வேலையை விட்டுச்
சென்றுவிட்டாய்.

26:51.945 --> 26:53.572
இயக்குநர் உங்களைக் கூட்டி வரும்படி
கூறினார், சார்.

26:53.572 --> 26:55.157
அவரது அலுவலகம் இங்குதான் உள்ளது.

26:55.157 --> 26:56.700
இல்லை. அது ஐந்தாவது தளத்தில் உள்ளது.

26:56.700 --> 26:58.577
மன்னிக்கவும், ஆனால்
அலாரம் அடித்துள்ளது.

26:58.577 --> 27:00.120
அது ஒன்றுமில்லாமல் இருக்கலாம்,
ஆனால் அதை நாங்கள் பார்க்க வேண்டும்.

27:00.120 --> 27:02.289
எல்லாம் சரியாகும் வரை இங்கேயே
காத்திருங்கள்.

27:02.289 --> 27:05.209
ஃபிளைட்டுக்கு இது பிடிக்காது.
நாம் உள்ளே போக வேண்டும்.

27:05.209 --> 27:07.085
மன்னிக்கவும், சார், எம்ஐ5.

27:07.085 --> 27:09.129
- நாங்கள் உள்ளே போக வேண்டும்.
- சரி. கண்டிப்பாக.

27:09.796 --> 27:11.673
- நீ இங்கே ஏன் வந்தாய்?
- நாம் போக வேண்டும்.

27:11.673 --> 27:13.425
- இப்போதே!
- இல்லை! நான் இயக்குநருக்காகக் காத்திருக்கிறேன்.

27:13.425 --> 27:15.302
ப்ளீஸ். அவருக்கு ஐந்து நிமிட
நேரம்தான் உள்ளது.

27:15.302 --> 27:17.346
ஐந்து நிமிட நேரம். சொல்வதைக் கேளுங்கள்.
அவர்...

27:23.894 --> 27:25.395
நாங்கள் டேவிட் கார்ட்ரைட்டுக்காக
வந்துள்ளோம்.

27:30.859 --> 27:32.653
- எங்கே கூட்டிச் செல்கிறாய்?
- இதோ வருகிறார்.

27:32.653 --> 27:33.904
பாருங்கள், அவர் உங்களுக்காக
கார் அனுப்பியுள்ளார்.

27:33.904 --> 27:35.697
- ஹலோ, டேவிட்.
- இங்கே என்ன செய்கிறாய்?

27:35.697 --> 27:37.533
- உட்காருங்கள். அப்படித்தான்.
- என்ன?

27:37.533 --> 27:39.952
நான் இவரை ஏஜென்டுகளிடமிருந்து கூட்டி வந்தது
பார்க்கிற்குத் தெரிந்தால், என்னைத் துரத்துவார்கள்.

27:39.952 --> 27:42.287
நான் ஃபிரான்ஸில் என்ன செய்தேன் என்பது
தெரிந்தால், என் கதை முடிந்தது.

27:42.287 --> 27:44.665
ஃபிரான்ஸில் நடந்தது இவனது தவறு.

27:44.665 --> 27:46.959
லேம்ப், நாம் எங்கே போகிறோம்?

27:46.959 --> 27:50.420
இவர் ஒரு லெஜண்ட், ஜாக்சன்.
இவருக்கு நற்பெயர் இருக்கிறது.

27:50.420 --> 27:51.713
அவர்கள் என்னை விரட்டியுள்ளனர்,
நினைவுள்ளதா?

27:51.713 --> 27:53.298
இதை யார் மீது குற்றம் சுமத்துவார்கள்?

27:53.298 --> 27:55.843
- எனக்குப் புரியவில்லை. நான்...
- உன் தப்பிப்பதற்கான பணம் எங்கே?

27:55.843 --> 27:57.344
- ஒன்றுமில்லை.
- அலுவலகத்தில்.

27:57.344 --> 28:00.514
அது இல்லாமல் இருக்கலாம். உன்னைக்
கொல்ல ஆள் சுற்றுகிறான், நினைவுள்ளதா?

28:00.514 --> 28:01.849
நான் உள்ளே போக மாட்டேன்.

28:03.058 --> 28:05.519
அடச்சே. தப்பித்ததும் கால் செய்.

28:34.047 --> 28:35.257
ரயில் வந்துகொண்டிருக்கிறது.

28:38.760 --> 28:39.761
கீழேதான்.

29:14.838 --> 29:16.924
மன்னிக்கவும். வழிவிடுங்கள்!

29:23.722 --> 29:25.474
மன்னிக்கவும். வழிவிடுங்கள்!

29:25.474 --> 29:26.517
நகருங்கள்!

29:26.517 --> 29:28.977
மன்னிக்கவும்.

29:30.938 --> 29:32.564
நாம் வருவதற்கு முன் அவன் ஓடியிருக்கலாம்.

29:32.564 --> 29:33.732
நாம் அவனைப் பார்த்திருப்போம்.

29:33.732 --> 29:35.150
அல்லது அவன் ரயிலுக்குள் ஒளிந்திருக்கலாம்.

29:35.150 --> 29:36.401
உள்ளே பாருங்கள்.

29:55.796 --> 29:57.214
அவன் படிக்கட்டில் கீழே போய்விட்டான்.

30:32.916 --> 30:36.003
ஹேய்! நகருங்கள்.
வழிவிடுங்கள்.

30:36.003 --> 30:37.087
நகருங்கள்!

30:43.468 --> 30:44.344
நகருங்கள்!

30:52.686 --> 30:53.687
போகலாம்.

31:14.750 --> 31:15.834
- நில்!
- நகருங்கள்!

31:15.834 --> 31:17.252
நகருங்கள்!

31:29.598 --> 31:30.599
அடச்சே.

31:53.205 --> 31:54.498
ஆம், சரி. நீங்கள் தொடர்ந்து தேடுங்கள்.

31:54.498 --> 31:56.750
அவன் லண்டன் பாலத்தில் இறங்கியதை போக்குவரத்து
போலீஸ் பார்த்துள்ளனர், ஆனால் தப்பித்துவிட்டான்.

31:56.750 --> 31:59.586
- அவர்கள் சிசிடிவியில் பார்க்கின்றனர்.
- அவன் ரயிலில் ஏறியிருப்பான்.

31:59.586 --> 32:01.255
- ஆம், ஆனால் எங்கே?
- வீட்டிற்கு.

32:06.385 --> 32:08.720
பார்க் ஏஜென்டுகள் அவனுக்காகக் காத்திருந்தனர்.

32:09.263 --> 32:10.722
அவனைப்
பிடித்துவிட்டனரா?

32:10.722 --> 32:11.890
இன்னும் இல்லை.

32:11.890 --> 32:14.726
ஆனால் நான் அவர்களது சிஸ்டத்திற்குள்
நுழைய வேண்டும்.

32:14.726 --> 32:16.687
அவர்களுக்கு என்ன தெரியும் என்றும் அவர்கள் எப்படி
நமக்கு முன் இருக்கின்றனர் என்றும் தெரிய வேண்டும்.

32:16.687 --> 32:17.896
அதை எப்படிச் செய்வீர்கள்?

32:19.189 --> 32:21.483
கார்ட்ரைட்டின் முகவரியை எப்படிப் பெற்றோமோ
அப்படித்தான்.

32:22.067 --> 32:23.443
நான் உன்னை அங்கே சந்திக்கிறேன்.

32:23.443 --> 32:26.780
டேவிட்டைப் பற்றிக் கூறிய பிறகு,
சாப்மனைக் கொல்லாமல் வராதே.

35:40.349 --> 35:41.558
நீ எங்கே போகிறாய்?

36:02.871 --> 36:05.499
நான் தலைமறைவாகிவிடுவேன்.
என்னைக் கொல்ல வேண்டியதில்லை.

36:05.499 --> 36:06.625
நான் போய்விடுவேன்.

36:07.209 --> 36:08.627
இல்லை, உன்னைக் கொல்ல வேண்டும்.

36:10.921 --> 36:15.592
டேவிட் கார்ட்ரைட் எங்கே என்று சொல்வாயா என்பதைப்
பொறுத்து வேகமாகவோ மெதுவாகவோ கொல்வேன்.

36:18.303 --> 36:20.806
சரி. நான்...

36:27.604 --> 36:28.814
சரி.

38:45.284 --> 38:46.410
அடச்சே.

39:24.031 --> 39:25.032
செல்லுங்கள்.

39:32.080 --> 39:33.081
இங்கே இல்லை.

39:36.168 --> 39:37.377
இங்கே இல்லை.

39:52.893 --> 39:53.894
இங்கே இல்லை.

39:58.398 --> 39:59.399
இங்கே இல்லை.

40:17.793 --> 40:18.877
இல்லை.

41:10.596 --> 41:11.680
ரிவர் கார்ட்ரைட்...

41:12.973 --> 41:14.141
மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துள்ளாய்.

41:15.434 --> 41:16.935
ஒருவழியாக உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

42:27.798 --> 42:29.800
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
